கோத்திர பிதா ஆபிரகாம் Bakersfield, California, USA 64-0207 1மறுபடியுமாக ஆதியாகம புத்தகம் 22ம் அதிகாரம் 15ம் வசன முதல் கொஞ்ச நேரம் பிரசங்கித்துவிட்டு ஆராதனை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். ஆதியாகமம் 22, 15ம் வசனம் முதற் கொண்டு. கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத் திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு. நீ உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக் கொடுத்து இந்த காரியத்தை செய்தபடியால். நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும் ,கடற் கரை மணலைப் போலவும், பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்களுடைய சத்துருக்களின் வாசல்களை சுதந்தரித்துக் கொள்ளுவார்க ளென்றும். நீ என் சொல்லுக்கு கீழ்ப்படிந்தபடியினால் , உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப் படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 2கீழ்ப்படிதலின் காரணமாக என்னே ஓர் வாக்குத்தத்தம்! தேவனுக்கு வேண்டியது கீழ்ப்படிதல். “கீழ்ப்படிதல் பலியிலும் பெரியது'' ஒருமுறை சொல்லப்பட்டிருக்கிறது. நீ தேவனுக்கு செய்யக் கூடிய எந்த பலியைக் காட்டிலும் கர்த்தருக்கு கீழ்படிதலே மேலானதாயிருக்கிறது. இன்றிரவு நாம் ஒரு அழகான பொருளைப் பற்றி கேட்கப் போகிறோம். தேகாத்திர தந்தை ஆபிரகாம், ''விசுவாசதந்தை“ என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அதனிமித்தமாக, அவனும், அவனுடைய வித்தும் இந்த பூமியை சுதந்தரித்து கொள்ள தேவன் வாக்களித்திருக்கிறார். ஆபிரகாமின் மூலமாக கிறிஸ்துவுக்குள் மரித்திருப்பதினால், ஆபிரகாமின் வித்தாகி, வாக்குத்தத்தத்தின்படி அவரோடு நாம் உடன் சுதந்திரரானோம். 3ஆபிரகாம் சாதாரணமான ஒரு மனிதன். ஏதோ விசேஷ மானவனல்ல. அவனுக்கு 75 வயது ஆகுமட்டும் நாம் அவனை குறித்து அறிந்தமட்டில் தேவன் அவனை அழைக்கவேயில்லை. அவனுக்கு அரை சகோதரியான, அவனுடைய மனைவி அந்த நேரத்தில் 65 வயதுள்ளவளாயிருந்தபடியினால், ஒருவேளை அவர் கள் மிக வாலிபமாயிருந்ததிலிருந்து இருவரும் சேர்ந்து வாழ்ந் திருக்கலாம். அவள் பிள்ளையில்லாமல் மலடியாயிருந்தாள். தேவன் ஒரு முற்றிலுமான வேறுபிரிதலை, உலகின் மற்றவர்களிட மிருந்து, அவனுடைய ஜனத்தார் எல்லாரிடம் இருந்தும், அவனுடைய பந்துக்கள் அனைவரிடத்தும் விட்டு வரச் சொன்னார். அவன் செய்யும்படியாக ஒரு விசேஷமான காரியம் ஒன்றிருந்தது. நீ ஒரு விசேஷமான வேலையை செய்ய வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கும்போது, எந்த அவ்விசுவாசத்தினின்றும், ஒரு முற்றிலுமான வேறு பிரிதலை எதிர்பார்க்கிறார். அவர் சொல்லு கின்றதை நீ செய்வதற்கு நீ ஒரு முழு கீழ்ப்படிதலுக்குள் வர வேண்டும். தேவன் அதை எதிர்பார்க்கிறார். நீ அதை வேறு வழியில் செய்ய முடியாது. இப்பொழுது, அவர் எப்பொழுதும் ஒரு முன் மாதிரியை வைக்கிறார். அது அவருடைய முன்மாதிரியே. அதாவது தேவனுக்கு என்று ஒரு வேறு பிரிந்த ஜீவியம் செய்ய குடும்பத்தார் எல்லாரிடத்திருந்தும், இனத்தார் ஜனத்தார் எல்லாரிடத்து இருந்தும் ஒரு முற்றிலுமான வேறு பிரிதல், அவசியம். 4வருடங்கள் கழிந்தன ஒன்றும் சம்பவிக்கவில்லை. ஆனால் ஆபிரகாமோ இன்னும் பற்றிக்கொண்டிருந்தான். அவன் மனந் தளர்ந்து போகவில்லை. ''தேவனுடைய வாக்கு தத்தத்தை குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவனை மகிமை படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். வருஷா வருஷம், அது அப்படியே கடந்து போக, அநேக குறை கூறுபவர்கள் எழும்பி “ஆபிரகாமே, தேசங்களின் தகப்பனே உமக்கு எத்தனை பிள்ளைகள் இப்பொழுது இருக்கிறார்கள்! என்று கூறியிருப்பார்கள். அது அவனைத் தளர்ந்து போக செய்யவில்லை. பிள்ளை இல்லை. சாராளுக்கோ ஸ்திரிகளுக்கு உள்ள வழிபாடு நின்று பிள்ளை பேற்றுக்கான வயதை தாண்டியவளாய் இருந்தாள், ஆனால் ஆபிரகாமோ தேவன் மேல் அதே விசுவாசத்தை உடையவனா பிருந்தான். அவன் ஒரு குழந்தைக்கு தேவையானவை களை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தான். ஏனென்றால் தேவன் தாம் நிறைவேற்ற முடியாதவராய் ஒரு வாக்கு தத்தத்தை பண்ண மாட்டார் என்று அவன் முழு நிச்சயமாய் நம்பியிருந்தான். அவனுடைய வித்து அதே காரியத்தை நினைக்க வேண்டும். அது எவ்வளவாய் உண்மையற்றதுபோன்று காணப் பட்டாலும், ஒரு இயற்கையான சிந்தைக்கு அது எவ்வளவுதான் இயற்கைக்கு மாறாக காணப்பட்டாலும் தேவன் தம்மால் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குதத்தத்தை செய்ய முடியாது. இன்றைக்கு அதே காரியத்தை நாம் விசுவாசிக்கிறாம். ஆபிரகா முடைய ஒவ்வொரு உண்மையான வித்தும் அப்படியே விசுவாசிக்கும், எந்த சூழ்நிலை அங்கு காணப்பட்டாலும், நாம் எவ்வளவு அறிவை சேகரித்துக் கொண்டாலும் சரி, எத்தனை காரியங்கள் சம்பவித்தாலும், ஒரு இயற்கையான சிந்தைக்கு எவ்வளவு இயற்கைக்கு மாறாக காணப்பட்டாலும், எவ்வளவு புத்தியீனமாய் காணப்பட்டாலும் அது ஒரு வித்தியாசத்தையும் செய்ய முடியாது. தேவன் அப்படி சொல்லியிருப்பாரானால் அது அப்படியேதான். ஆபிரகாமுடைய வித்துக்கள் கர்த்தர் சொல்லுகிற தாவது என்பதன் பேரில் சார்ந்திருப்பார்கள். அது அதை முடிக்கும். 5வருடங்கள் கழிந்தும் பிள்ளையேயில்லை என்று நாம் பார்த்தோம். தேவன், தாம் ஆபிரகாமுக்கு பண்ணின வாக்கு தத்தத்தைக் காத்துக் கொள்ள உண்மையுள்ளவராயிருந்தார், ஏனென்றால் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். குட்டி பயல் ஈசாக்கு காட்சியில் வந்தான். குட்டி ஈசாக்கு காட்சியில் வந்த பின்பு, தேவன் அவனுக்கு இரட்டை சோதனையை கொடுத்தார் என்று பார்க் கிறோம். சுமார் 115 அல்லது 120 வயதாயிருக்கும் போது அவர் ஆபிரகாமை நோக்கி “இந்த உன்னுடைய ஒரே குமாரனை, நான் உனக்கு காண்பிக்கும் மலைக்கு கொண்டு போய், அங்கே, அவனை அந்த மலையின் மேல் பலியாக கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று சொன்னார். வேறு விதமாக கூறுவோ மானால் வாக்குதத்தம் நிறைவேற்றப்படும் என்பதற்கு அத்தாட்சி யானயாவற்றையும் அழித்து போடு என்பதாகும். அது எல்லா இயற்கையான காரியங்களையும் எடுத்து போடுவதாகும். 'மரித்தோரிலிருந்து வந்த ஒருவனை போன்று நான் அவனை பெற்றேன். அவர் அவனை நிச்சயமாய் மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்று முழு நிச்சயமாய் நம்புகிறேன் என்று ஆபிரகாம் சொன்னான். அப்படிப்பட்ட ஜனங்கள் தான் இப்பொழுது ஆபிரகாமின் வித்தாயிருக்கிறார்கள், ஏனென்றால் அவர் நம்மை மரித்தோரிலிருந்து எழுப்பினார். நாம் பாவத்திலும் அக்கிரமத் திலும் மரித்தவர்களாயிருந்தோம். என்னுடைய மனதை மாற்றவும் என்னுடைய சிந்தனைகளை மாற்றவும், என்னுடைய இயற்கை யானவைகளை மாற்றவும், என்னை முழுவதுமாக மாற்றவும் கூடியவர் தாம் விரும்பினவாறு அவரால் செய்யமுடியும். அவர் சொல்லுகின்றதெல்லாம் நான் உண்மையென்று விசுவாசிக்கிறேன். ஆபிரகாமுடைய ஒவ்வொரு வித்தும் அதே காரியத்தை விசுவாசிக் கிறது. 6ஆபிரகாம், தேவனுக்கு கீழ்படியாதவனாக இல்லாமல் அந்த சிறு பையனை கொண்டுபோனான். அன்று காலை அவன் தன் வேலைக்காரரிடத்தில் ''நீங்கள் கழுதையை வைத்துக் கொண்டு இங்கே இருங்கள். நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம் மட்டும் போய் தொழுதுக் கொண்டு, அவனும் நானும் திரும்பி விடுவோம்“ என்று சொன்னான். ஓ! எப்படி அவன் அதை செய்யப்போகிறான்? அவன் தன்னுடைய சொந்த மகனுடைய ஜீவனை எடுக்கும்படியாய் அந்த மலையின் உச்சிக்கு போகிறான். இருந்தபோதிலும் அவன் ''நானும் பிள்ளையாண்டானும் திரும்பிவருவோம்'' என்று சொல்லுகின்றான். ஏதோ சம்பவிக்க வேண்டுமென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் தேவன் அதை எப்படி செய்யப்போகிறார் என்பதை அவன் அறியாதிருந்தான். ஆனால் தேவன் அதை வாக்கு பண்ணியிருக்கிறார் என்பதை அறிந்திருந்தான். நாம் அக்கரை கொள்ள வேண்டியதெல்லாம் அதுவே, தேவன் வாக்கு பண்ணியிருக்கிறார்! அது எவ்விதமாக இருக்கப் போகின்றது? என்னால் அதை உனக்கு சொல்லமுடியாது. ஆனால் தேவன் அப்படி சொல்லியிருக்கிறார். அவர் இரண்டாவது முறை யாக இயேசு கிறிஸ்துவை அனுப்புவேன் என்று சொன்னார். அவர் சரீரபிரகாரமாக நிச்சயம் வருவார். அவர் தமக்கு சொந்த மானதை உரிமை பாராட்டுவார். மீட்கப்பட்டவர்கள் அவரோடு இந்த பூமியில் ஆயிரவருஷ ஆட்சி, ஆயிர வருடங்கள் ஆட்சி இருக்கத்தான் போகின்றது. நாம் அந்த நேரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம், அதைத் தான் அவர் வாக்குபண்ணியிருக்கிறார். வியாதியஸ்தரை சொஸ் தபடுத்தவும், மரித்தோரை எழுப்பவும், பிசாசுகளைத் துரத்தவும் அவர் வாக்குப் பண்ணியிருக் கிறார். அவர் செய்வதாக வாக்குபண்ணியிருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எவ்விதமாக? எனக்கு தெரியாது. அதை செய்வதாக அவர் வாக்களித்துள்ளார்! நாம் அதை விசுவாசிக்கிறோம் காரியம் முடிந்தது. ஒரு மனிதன் தேவனை விசுவாசிக்கும்போது, அவர் சொல்லுகின்ற எல்லாவற்றையும் அவன் விசுவாசிக்கின்றான். அந்தவிதமாகத்தான் ஆபிரகாம் தேவனை விசுவாசித் தான். அந்த வாக்குதத்தமானது நிறைவேற்றப்படும் என்பதற்கு ஆதாரமாயிருந்த எல்லாவற்றையும் அழித்துப் போடும்படி அவனுக்கு சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தேவனால் அதை செய்யக்கூடும் என்று அவன் முழுநிச்சயமாய் நம்பினான். 7இந்த ஒரு பெரிய வாக்குதத்தத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அவர் அதை அவருடைய வித்திற்கும் கொடுத்தார். ஆபிரகாம் விசுவாசமாய் இருந்தபடியினாலும் தேவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையை காத்துக் கொண்டபடியினாலும், தேவன் இந்த பிள்ளையை மரித்தோரி லிருந்து எழுப்புவார் என்று அறிந்திருந்தபடியினாலும், அவன் தன் சொந்த குமாரனென்று பாராதிருந்தான். தேவன் தம்முடைய குமாரனை கொடுத்ததிற்கு பாவனையாய் அவன் மலையின் மேல் பலிக்கான விறகுகளை அடுக்கினது போன்று, கிறிஸ்துவும் அவருடைய சொந்த பலிக்கான மரத்துண்டை தாமே தூக்கி தாம் சிலுவையில் அறையப்பட்டதான மலையின் உச்சிக்கு கொண்டு சென்றார். 8இதில், இதை செய்வதில், இது தேவனை அவ்வளவாய் பிரியப்படுத்தி, உலகத்தின் மேலுள்ள எல்லாவற்றை காட்டிலும் தன் சொந்த குமாரனைக் காட்டிலும் நேசித்தான் என்று காணும்படியாய் செய்தது என்று உணருகிறோம். ஒருவனும் சொல்ல முடியாததற்கும் மேலாய், ஒருவனும் செய்யக் கூடியதற்கு மேலாய் அவன் அவரை நேசித்தான். அவன் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும்படியாய் போதுமான அளவிற்கு தேவனை இன்னும் நேசிக்கிறவனாயிருந்தான். எல்லா ஆபிரகாமுடைய வித்தும் அவ்விதமாகவே தேவனை விசுவாசிக்கும். அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள். அது தேவனை அவ்வளவாய் பிரியப்படுத்தினபடியினால், இதோ அவர் சொன்னது உன்னுடைய வித்து அவனுடைய பகைஞனின் வாசல்களை சுதந்தரிக்கும் உன்னுடைய வித்து அவனுடைய பகைஞனின் வாசல்களை சுதந்தரிக்கும் என்பதே நினைவிருக்கட்டும் அது கர்த்தர் சொல்லுகிறதாவது. ஆபிரகாமின் வித்து அதை விசுவாசித்தது. நீ ஒரு அசலான ஆபிரகாமின் வித்தாயிருப்பா யானால், ஆபிரகாமுக்கு தேவன் பேரில் உண்டாயிருந்த விசுவாசம், உனக்குள் இருக்கிறது. தேவன் தாம் சொன்னதை, தேவன் அவருடைய வாக்குதத்தத்தை காத்துக் கொள்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாய். 9அவர் அதை சொன்னார், நினைவிருக்கட்டும் ஆபிரகாமுக்கு ஒரு பரிசோதனையை கொடுத்தப் பிறகு தான் அவர் இந்த வாக்குத்தத்தை கொடுத்தார். ஆபிரகாமின் வித்து முதலாவது பரிசோதிக்கப்பட வேண்டும். வார்த்தையை உண்மையாக விசுவாசிக்கின்றதா என்று பார்க்க, நினைவிருக்கட்டும். ! வன் தேவனுடைய வாக்குத்தத்தைக் காத்துக் கொள்ள உண்டான ஒரே வழி, ஏனென்றால் அவன் தேவனுடைய வாக்கு தத்தத்தை விசுவாசித்தான். ஆக அவன் அதை விசுவாசிக்கிறானா இல்லையா என்று பரிசோதிக்கப்பட்டான். நாம் அந்த பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டோம். ஆபிரகாமின் வித்து இன்றைக்கு அந்த பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்வோமா அல்லது அதை குறித்து மனிதன் சொன்னதை எடுத்துக் கொள்வோமா? கோட்பாடு என்று ஒரு அமைப்பு உண்டாக்கிக்கொண்ட ஒன்றை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது தேவன் சொன்னதை எடுத்துக் கொள்ளப் போகிறோமா? மற்ற காரியங்கள் எப்படியாயிருந்தாலும் சரி, தேவனுடைய வார்த்தை உண்மையாயிருக்குமானால், நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்போம். எல்லா மனுஷருடைய வார்த்தையும் பொய். தேவனுடைய வார்த்தை சத்தியமுமாய் இருப்பதாக. ஆபிரகாமுடைய உண்மையான வித்து. நீ அந்த உண்மையான வித்தாயாவதற்கு முன்பாக, ஆபிரகாம் தாமே பரிசோதிக்கப்பட்டது போன்று , நீயும் ஒரு பரிசோதனைக்குள்ளாக போக வேண்டியவனாயிருக்கின்றாய். அவர் ஆபிரகாமுக்கு மாத்திரம் வாக்கு பண்ணவில்லை ஆனால் உன் வித்து சத்துருக்களின் வாசல் களை சுதந்தரிக்கும். ஓ 10தேவனுடைய வாக்குதத்தமான வார்த்தையின் சோதனையில், கோத்திர தந்தையான ஆபிரகாம் முழுவதுமாக விசுவாசித்தான். சற்று சிந்தியுங்கள். சூழ்நிலைகள் என்ன வாயிருந் தாலும் கவலையில்லாமல், தேவனுடைய வார்த்தைதான் சரி யானது என்று அவன் இன்னமும் விசுவாசித்தான். மகாபெரிய கோத்திர தந்தை, ஆபிரகாம், பரிசோதனையினிடத்தில் கொண்டு வந்த போது, அவன் ஒருபோதும் தடுமாறவில்லை. தேவன் அவனை மரணத்தினின்று உயிரோடு எழுப்புவார் என்று அவன் விசுவாசித் தான். அவள் அதை விசுவாசித்தான், ஏனென்றால் அந்த வாக்கு தத்தத்தை தேவன் பண்ணினார். ''அவன் தேசங்களுக்கு தகப்பனா யிருப்பான்'' என்று தேவன் ஒரு வாக்கு தத்தம் பண்ணினபோது, அது அப்படியே இருக்கும் என்று அவன் விசுவாசித்தான். அது எப்படி உண்டாயிருக்கும் என்று அவன் அறியான். அவன் 25 வருடங்கள் நம்பிகையாயிருந்து ஒரு குழந்தை வந்தபோது, அந்த குழந்தையை அழிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டான், அப் பொழுதும்கூட தேவனுடைய வாக்குதத்தம் உண்மை என்று அறிந்து, தன் மகனையும் தந்தான். 11அதே விதமாயிருக்கும் அவனுடைய வித்துக்கள். ஆபிரகாமின் வித்தாயிருப்பவர்களுக்கு, தேவனுடைய வாக்கு தத்தம் ஒரு முத்திரையாயிருக்கிறது. வாக்குதத்தமானது ஒரு முத்திரையாயிருக்கிறது, ஒரு கையெழுத்திட்ட சாட்சியாயிருக் கிறது. நாம் ஒவ்வொரு வாக்கு தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை விசுவாசிக்கும் போதும், அந்த வாக்குதத்தத்தை உறுதிபடுத்த ஒரு முத்திரை நமக்கு கொடுக்கப்படுகின்றது. பாருங்கள் நாம் ஆபிரகாமின் வித்தாயிருப்போமானால், நாம் வேதத்தை விசுவாசிக்கிறோமோ இல்லையோ, நாம் ஒரு பரிசோதனைக்குள் செல்ல வேண்டியதாயிருக்கிறது. வேதம் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. ஏனெனில் அது தேவனாயிருக்கிறது. அந்த பரிசோதனைக்குள் சென்ற பின்பு நீ விசுவாசிக்கின்றாய். அவர்களில் சிலர் “அற்புதங்களின் நாட்கள் கடந்து போயாயிற்று'' என்று சொல்லும் போது, நீ அதை ஏற்றுக் கொள்ளும் போது, அது வார்த்தைக்கு முரணாயிருக்கும். ஒரு வேளை நீ நீங்கள் பரிசுத்தாவியை இந்நாட்களில் பெறுகிறதில்லை. அப்படியொரு காரியமுமில்லை, வெறுமனே அந்த 12 அப்போஸ்தலர்கள் மட்டுமே பெற்றுக் கொண்டார்கள்“ என்று சொல்வீர்களானால். பேதுரு அந்த பெந்தேகோஸ்தே நாளன்று பிரசங்கித்துக் கொண்டிருந்த போது வார்த்தை சொல்லுகிறது “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள் வாக்குதத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளை களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தி லுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று சொன்னார். 12அது தான் அதனுடைய சரியான அர்த்தம். அது தான். இப் பொழுது அந்த பரிசோதனையை தேவனுடைய அமில பரிசோதனையை, எடுத்து, அந்த குறிப்புசீட்டின்படி பின்பற்ற ஆயுத்தமாயிருப்பாயானால், நான் உனக்கு சொல்லுகிறேன். நீ மட்டும் விசுவாசித்தால், தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளுகிறவராயிருக்கிறார் என்பதை நீ கண்டு கொள்வாய். அது சரியே. ஆனால் நீ அதனூடாக போக வேண்டும். ஏனெனில் அது ஒரு முத்திரையாயிருக்கிறது. நீ அதை பெற்றுக் கொள்ளும் போது, அப்பொழுது நீ வாக்குதத்தத்தை பெற்றுக் கொள்வாய். ஏனெனில் அது தேவனுடைய செய்முறை சீட்டாய் இருக்கிறது. எந்த விதமாய் அதை செய்யவேண்டும் என்று, அந்த விதமாகத் தான் நாம் அதை பின்பற்ற வேண்டும், அவர் சொன்ன விதமாகத்) தான் ஏதோ கொஞ்சமட்டுமல்ல, ஆனால் யாராயிருந்தாலும் விசுவாசிக்கின்ற யாராயிருந்தாலும், மனந்திரும்பு. கின்ற யாராயிருந்தாலும், எல்லா தலைமுறைகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும், விசுவாசிக்க விரும்புகின்ற யாவருக்கும் உள்ளது. தேவனுடைய வார்த்தையின் மேலுள்ள விசுவாசம் உன்னை இந்த வாக்குத்தத்தத்தண்டை கொண்டு வருகின்றது. அப்படியானால், அதன்பின்பு தான் அந்த வாக்குதத்தத்தின் முத்திரையை சுதந்தரித்துக் கொள்ள வல்லமையுள்ளவனாயிருப்பாய். நாம் பெற்றுக் கொள்ளுகின்றதான வாக்கு த த் தம் முத்திரை, பரிசுத்தாவியின் அபிஷேகமாயிருக்கிறது. அது சரியே, ஏனென்றால் அது தேவன் ஆவியின் ரூபத்தில், நீ அவருடைய வார்த்தையாயிருக்கின்ற படியினால், அவர் உனக்குள்ளில் வருகிறார். நீ அவருடைய வார்த்தையை உனக்குள் ஏற்று கொள் வாயானால், பரிசுத்தாவி மட்டும்தான் அதை ஜீவிக்கும்படியாய் செய்யமுடியும். அதன் பின்பே, உன்னை எதிர்க்க முயற்சிக்கும் எல்லா பகைஞரின் வாசலையும் நீ சுதந்தரித்துக் கொள்வாய். அது சரி, தேவன் அதை வாக்களித்திருக்கிருர். அது அப்படியேயாகும். 13இப்பொழுது நினைவிருக்கட்டும். அப்பொழுது தான் உங்களால் அதை செய்ய முடியும். அதன் பின்பு தான், வார்த்தை யினால் பரிசோதிக்கப்பட்ட பின்புதான். ஆபிரகாம் வார்த்தையினால் பரிசோதிக்கப்பட்டான் ''உனக்கு ஒரு குமாரன் இருப்பான், ஆபிரகாமே உன்னால் விசுவாசிக்க முடியுமா?'' ''ஆம்'' குமாரன் வந்தான் ''இப்பொழுது அவனை அழித்து போடு ஆபிரகாமே நீ இன்னமும் அதை விசுவாசிக்கின்றாயா?'' “ இன்றும் அதை நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் மரித்தோரிலிருந்து அவனை எழுப்ப உம்மாலாகும்'' அதற்கு பின்பு அவர் ''உன் வித்து அவர்களுடைய பகைஞரின் வாசல்களை சுதந்தரிப்பார்கள்'' என்று சொன்னார். ஆமென்! பரிசோதனை வந்த பின்னர். நாம் ஆபிரகாமின் இயற்கையான வித்து சிலவற்றை எடுத்து பார்ப்போம், அதில் இன்று நாம் ஆவிக்குரிய வித்தாயிருக் கிறோம். தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசித்து ஒரு போதும் கேள்விகள் கேட்காத இயற்கையான வித்து சில வற்றை நாம் பார்ப்போம். “என்னத்திற்காக ஒரு கிறிஸ்தவ பெண் தன்னுடைய உள்ளாடையை காட்ட வேண்டும்? என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ஒரு போக்காக சொன்னேன், 14நீ தேவனால் மறுபடியும் பிறந்திருக்கிறாய். நீ யார் என்பதை காட்ட உன்னிடத்தில் பரிசுத்தாவியின் அழகு இருக் கின்றது. உன்னிடத்தில் கற்பு உண்டு. அந்த ஊழல், பெண்களிடம் அது இல்லை. அதுசரி. கற்போடு இருக்கின்ற ஒரு உண்மையான தேவனுடைய ஸ்திரி, ஒரு வேளை அவள் பரிகசிக்கப்படலாம். பழம் யான நாகரீகம் என்று அழைக்கப்படலாம். அவர்கள் தொட முடியாத தான தொன்றை நீ உடையவளாயிருக்கிறாய். அவர்கள் அதை இழந்துவிட்டார்கள், ஆனால் மறுபடியுமாக அதை அவர்கள் ஒரு போதும் பெற்றுக் கொள்வதில்லை. அதுசரி உன்னிடம் கற்புண்டு. தேவன் அதைதான் பார்க்கிறார். கற்பு. புரிகின்றதா? 15ஆனால் உன்னுடைய மனதில் ஒரு கேள்வி உண்டா யிருந்தால், முதலாவது காரியம். நீ அதை செய்ய வே செய்யாதே. உன்னுடைய மனதில் ஒரு கேள்வி இருக்குமானால், ஜெபவரிசையில் வந்து நிற்காதேயும். நீ முற்றிலுமாக விசுவாசிக்காமல், நீ சுகமடைய போகின்றாய் என்பதை தவிர வேறொன்றும் என் மனதிலில்லை என்று நீ ஆணித்தரமாய் இருந்தாலொழிய நீ வர வேண்டாம். அப்படியானால் நீ சுகமடைந்த ஒருவனாக மேடையை விட்டு போவாய். அதுசரி, உன் மனதில் ஒரு கேள்வியும் இல்லாத போது நீ தேவனை விசுவாசிக்க வேண்டும். போலி விசுவாசமல்ல உண்மையாய் விசுவாசிப்பது. ஆபிரகாமின் வித்து அதை விசுவாசிக்கின்றது. ஏனெனில் வார்த்தை அப்படி சொல்லுகின்றது. அதன் காரண மாக தான் நாம் விசுவாசிக்கிறோம். வேறு யாரோ குறை கூறினார் கள் என்பதற்காக அல்ல, யாரோ அப்படி சொன்னார்கள். என்பதற்காக அல்ல. ஏனென்றால் தேவன் அதை அப்படி சொன்னார். ஆகவே அது அதை உண்மையாய் ஆக்குகிறது. தேவன் அதை சொல்லும் போது அது எல்லா கேள்விகளையும் முடிக்கும். அவரே அந்த கடைசி வார்த்தையாயிருக்கிறார். அவரே அந்த முடிவானதாயிருக்கிறார். தேவன் எதையாவது சொல்வாரா னால் அது காரியத்தை முடித்தது. அதற்கு எதிராக ஒன்றும் பேச முடியாது. ''எல்லா மனுஷருடைய வார்த்தையும் பொய்யாயும் என்னுடையது உண்மையுமாயிருப்பதாக.'' என்கிறார். 16இந்த சில வித்துக்களை குறித்து நாம் பார்க்கும் போது நாம் சற்று சிந்திப்போம். நாம் அந்த எபிரேய பிள்ளைகளை பற்றி சிந்திப்போம். அந்த சிலை வணக்கத்தை குறித்து அவர்கள் பரிசோதிக்கப்பட்ட பிறகு உங்களுக்கு நினைவிருக்கின்றதா அந்த இராஜா சொன்னான். ''எவனாகிலும் தாழ விழுந்து அதை பணிந்துக் கொள்ளாமற் போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினி சூளையின் நடுவில் போடப்படுவான்'' என்று சொன்னான். இந்த பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைதான் சரியாயிருக்கும், எந்த உருவத்தையும் வணங்கக் கூடாது. என்று விசுவாசித்தார்கள் ஆனால் அவர்கள் இரண்டில் ஒன்று என்ற நிலைமைக்கு வந்தபோது, அவர் அப்படி நிற்பார்களா என்று பரிசோதிக்கப்பட்டார்கள். அங்கே கீழே இருந்த எல்லா பிள்ளைகளும் அதை ஏற்றுக் கொண்டு பணிந்து கொண்ட போது, அவர்கள் நேராக இராஜா சொன்ன வழியில் போனார்கள். அந்த நாளின் அநேகரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரியத்தோடு ஒவ்வி அவர்கள் அதை செய்ய வேண்டுமென்று போனார்கள். ஒரு சொரூபத்தை வணங்கி, தேவனுடைய வார்த்தையை உடைக்கிறார்களா என்று அவர்கள் பரிசோதிக்கப் பட்டபோது, அவர்கள் வார்த்தைக்கு உண்மையாயிருந்தார்கள். சூழ்நிலைகள் எப்படியாயிருந்த போதிலும், அவர்கள் வார்த்தைக்கு உண்மையாய் இருந்தார்கள். அவர்கள் அவர்களை அக்கினி சூளைக்குள் தூக்கி எறிந்த போது, தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறினது. அவர்களுடைய பகைஞரின் வாசல்களை அவர்கள் சுதந்தரித்தார்கள். அக்கினியின் உஷ்ணத்தை பூட்டிப் போடும் சாவியை உடைய நான்காவது ஆள் அங்கே நின்று கொண்டிருந்தார். அது அவர்களை ஒன்றும் செய்யக்கூடாமல் அவர்களை கட்டவிழ்த்தது. ஆமென். 17ஒரு மனுஷனோ மனுஷியோ அந்த பரிசோதனையை எடுக்க ஆயத்தமாயிருக்கும் போது, அமில பரிசோதனை! நீங்கள் பாருங்கள், அவர்கள் அந்த அக்கினிக்குள் போக வேண்டியிருந்தது. அவர்கள் அப்படி செய்த போது, அவர்கள் அக்கினிக்குள் இருந்தார்கள், அங்கு நடைபெற்ற ஒரே ஒரு காரியம் இந்த அக்கினி பரிசோதனை அவர்களுடைய கைகளின் கட்டுகளை கட்டவிழ்த்தது. அநேக நேரங்களில் நாம் இந்த உலகத்தோடு நமக்கு கட்டுகளை உண்டாக்கிக் கொள்ளும் போது, தேவன் நம்மை போக விடுகிறார், அந்த அக்கினி பரிசோதனை நம்மேல் வரும்படி அனுமதிக்கிறார், அங்கே நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியவகளாயிருக்கிறோம். அப்படி நாம் அதை செய்யும் போது, தீர்மானத் தின் நாற்சந்தியில் ஒரு உண்மையான ஆபிரகாமின் வித்து நின்று கொண்டிருக்கும் போது, இப்படிப்பட்டதான பரிசோதனை செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம். அவன் தேவனுக்கு சேவை செய்ய அவனுடைய தீர்மானத்தை எடுக்கிறான். இது அவனுடைய கட்டுகளை உடைத்து அவனை சுயாதீனனாக ஆக்கத்தான் முடியும். சாத்தான் உனக்கு ஒரு வியாதியை கொடுக்கலாம். அவன் உனக்கு ஒரு காரியத்தை கொடுக்கலாம். இன்னொன்றை கொடுக்கலாம் தேவன் உன்னை அந்த நடுசந்திக்கு கொண்டு வரவில்லை என்று நீ எப்படி அறிவாய், நீ எப்பேர்ப்பட்ட தீர்மானத்தை எடுக்கின்றாய் என்று காண. | 18அவர்கள் அக்கினியின் வாசலை சுதந்தரித்துக் கொண்டார்கள். அக்கினியால் அவர்களை எரித்துப் போட முடிய வில்லை. அவர்களின் மேல் அக்கினியின் மணம் கூட வீசவில்லை ஏனென்றால் அவர்கள் ஆபிரகாமின் வித்து என்று அறிந்திருந் தார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்காகவும் தேவனுக் காகவும் நின்றார்கள். அவர்கள் பகைஞரின் வாசல்களை சுதந்தரித்துக் கொண்டார்கள். அக்கினியால் அவர்களை எரித்துப் போட முடியவில்லை. ஏனெனில் அவர்கள் வாசல்களை சுதந்தரித்து கொண்டனர். 19அதற்கு பின்பாக, அங்கே ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசி தானியேல் என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி இருந்தான் அவன் தேவனுக்கு சேவை செய்வானா இல்லையா என்ற பரிசோதனை அவனுக்கு வந்தது. அந்த விதமான நேரம் அவனுக்கு வந்தபோது அதாவது ஒரு உண்மையான தேவனை ஆராதிப்பதா அல்லது ஒரு அஞ்ஞான தேவனை ஆராதிப்பதா என்று, அவன் அதை செய்ய மறுத்து ஜன்னல்களை திறந்து வைத்து, ஒவ்வொரு நாளும் தேவனை நோக்கி விண்ணப்பித்தான். அதனால் அவன் குற்றங்கண்டு பிடிக்கப் பட்டு, உள் நாட்டு ஐக்கிய தீர்ப்பின்படி தண்டிக்கப்பட்டு, ஒரு சிங்கங்களின் கெபியிலே போடப்பட்டான். பட்டினியாயிருந்த சிங்க கூட்டம் அவனை நோக்கி கர்ஜித்தது. அவன் என்ன செய்தான் அவனுடைய பகைஞரின் வாசலை அவன் சுதந்தரித்தான் அந்த சிங்கங்களால் அவனை தின்று போட முடியவில்லை. தேவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தை, ஒரு தூதனை அனுப்பினார். அவன் சிங்கங் களுக்கும் தானியேலுக்கும் மத்தியில் நின்றான், அவன் பகைஞ்சனின் வாசலை சுதந்தரித்தான். ஏனென்றால் அவன் ஒரே உண்மையான தேவனை ஆராத் திப்பானா அல்லது அவனுடைய டஜன் அஞ்ஞான கடவுள்களை ஆராதிப்பானா என்று பரிசோதிக்கப்பட்டான். ஆக அவன் பரிட்சைக்கு நின்று பகைஞனின் வாசலை சுதந்தரித்தான். அந்த சிங்கங்களால் அவனை தொடக்கூட முடியவில்லை. ஏனென்றால் தேவன் அவனோடுகூட இருந்தார். தேவனுடைய வாக்குதத்தம் உண்மையாய் நின்றது, ஏனெனில் அவன் ஆபிரகாமின் உண்மையான ஒரு வித்தாய் இருந்தான் 20மோசே ஓ! இன்னொரு மகாபெரியவன். அவனும் கூட தேவன் அவனுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை காணும்படியாக பரிசோதிக்கப்பட்டான். “நீ அங்கே போகும்போது நான் உன்னுடனே கூட இருப்பேன்.'' அவனுக்கு கொடுக்கப்பட்ட வரத்தை போன்று போலியானதை உடையவர்களாயிருந்த யஞ்ஞேயும் எம்பிரேயுக்கும் முன்பாக அவன் நின்றபோது, மோசே கட்டளை பெற்று செய்த அதே காரியத்தை செய்ய முயற்சித் தார்கள். தேவன் அவனை அழைத்திருந்தார். இந்த கட்டளையை அவனிடந்தான் கொடுத்தார் என்று அவன் அறிந்திருந்தான். அங்கே நின்று, தேவன் சொன்னவிதமாக அந்த அற்புதத்தை செய் தான். அதே காரியத்தை செய்யும்படியாக, போலியானவர் களும் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவனை பொருட் படுத்தவில்லை. அவன் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய் நின்றான். அவன் பகைஞனின் வாசல்களை சுதந்தரித்தான். ஆமென். ஏனென்றால் யார் அதை போலியாய் செய்யக் காத்துக் கொண் டிருந்தாலும் கவலையில்லை, அவன் தேவனுடைய வாக்குதத்தத் திற்கு உண்மையாய் நின்றான். 21ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் என்ன ஒரு பாடமாயிருக் கிறது. நீங்கள் சுற்றுமுற்றும் பார்த்து ஒரு மாய்மாலக்காரனை, ஒரு உண்மையான அசலான பொருளை போன்ற போலியை முயற்சித்தவன் என்று நினைவில் வையுங்கள். ஆனால், அதன் அர்த்தம் என்னவென்றால் அசலான ஒன்று இருக்கின்றது என்ப தாகும். தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயிருங்கள்! என்ன வந்தாலும், என்ன போனாலும் சரி அவருடைய வாக்குத்தத்தத்தை கைகொள்ளுங்கள். ஆம், தானியேல் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயிருந்தான். எத்தனைபேர் அவனை போன்று, போலியாய் செய்ய முயற்சித்தாலும், மற்ற எல்லாவற்றிலும், அவன் உண்மையாய் நின்றான். அவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு போகும்படியான ஒரு நோக்கத்திற்காக வந்தான். அவர்கள் எகிப்தை விட்டு, வாக்குதத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்கு போகும் படியான வேளை வந்தபோது, கருங்கடல் அங்கே வழியிலே நின்றது. அவன் தண்ணீரின் வாசல்களை சுதந்தரித்தான், கதவுகள் படாரென திறந்தன. தண்ணீர் பின்னிட்டு விழுந்தது, மோசே இஸ்ரவேல் ஜனங்களை, தேவன் கொண்டு வரவேண்டும் என்று கட்டளை கொடுத்த மலையினிடத்திற்கு வனாந்திரத்திற்குள் கொண்டு சென்றான். ஆமென். அவன் பகைஞ்சரின் வாசல்களை சுதந்தரித்தான், அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாம் அந்த வாக்கு தத்தத்தை உடையவனாயிருந்தான். அதாவது அவனுடைய உண்மையான வித்து பகைஞரின் வாசல்களை சுதந்தரிக்கும். தண்ணீரின் வாசல் மூடப்பட்டிருந்தபடியினால் அவனால் கடந்து போகக்கூடாதிருந்தது. அது தானே அவனுடைய கடைமையின் பாதையாய் இருந்தது. அவன் அந்த பிள்ளைகளை அந்த மலையினிடத் திற்கு கொண்டுவர வேண்டியவனாயிருந்தான். தேவன் அப்படி அவனிடம் சொல்லியிருந்தார். அங்கே அவன் வழியிலே நின்றது அந்த வாசல், அவன் பகைஞனின் வாசலை சுதந்தரித்தான். 22கொஞ்ச நாட்கள் கழித்து, அவர்கள், யோசுவா காதேஷ் பர்னியாவுக்கு வந்தபோது அந்த நாட்களில் காதேஷ் பர்னியா உலகத்தின் நியாயஸ்தலமாயிருந்தது, அங்கே இஸ்ரவேல் தன் நியாய தீர்ப்பை சந்தித்தது. அவர்கள் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்த அந்த தேசத்தை வேவு பார்க்க யோசுவாவுடன் காலேபும், கோத்திரத்திற்கு ஒருவனாக பத்து பேருமாக அனுப்பப் பட்டார்கள். அந்த பெரிய இராட்சதர்கள் அங்கே இருக்கிறதை அவர்கள் கண்டபோது, அவர்களில் 10 பேர் மிகவுமாக பயந்து ''நம்மால் அதை சுதந்தரிக்க முடியாது. அது மிகவும் பெரியது. ஏன் நமக்கு கிடைத்த எதிர்ப்பை பாருங்கள்'' என்றார்கள் அவர்கள் காரியத்தை அறிவிக்க திரும்பி வந்தபோது, ஒரு தீய அறிவிப்பை கொண்டு வந்தார்கள். “நான் உங்களுக்கு அந்த தேசத்தை கொடுத்தேன் அது உங்களுடையது'' என்று தேவன் சொல்லியிருக்கும் போது அவர்கள் ஏன் அந்த தீய அறிவிப்பை கொண்டு வரவேண்டும்?'' இந்த தேசத்தை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். அது ஒரு நல்ல தேசம் அது பாலும் தேனும் ஓடுகின்ற தேசம்'' என்று அவர் எகிப்திலேயே அவர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால் அவர்கள் எதிர்க்க வேண்டியது அவ்வளவு பெரியதாயிருந்ததை கண்டபோது, அவர்களில் 10 பேர் திரும்பி வந்து “நம்மால் அதை செய்யமுடியாது'' என்றார்கள். யோசுவா ஜனங்களை அமைதலாக்கி ''அதை நாம் சுதந்தரித்துக் கொள்ள அதிகமானவர்களாயிருக்கிறோம், சுலப மாய் ஜெயிக்கலாம்'' என்று சொன்னான். என்ன காரணத்தினால்? அவன் வாக்குதத்தத்தை நோக்கி பார்க்கிறான். அவன் ஆபிரகாமின் ஒரு உண்மையான வித்தாயிருக்கிறான். எதிர்ப்பு எத்தன் மையதாயிருந்தாலும் சரி, “நாம் அதின் வாசலை சுதந்தரித்துக் கொள்ளலாம். ஏனென்றால் தேவன் அத்தேசத்தை வாக்களித்திருக் கிறார்' 23அதற்கு பின்னர் அவன் இஸ்ரவேல் புத்திரரை ஆற்றங் கரைக்கு கொண்டு வந்தான். ஏப்ரல் மாதத்தில், அந்த மகாநதி அங்கே கரைபுரண்டு நின்றது. யோர்தான் மலையிலிருந்து இறங்கி வந்து மட்டமான பூமியில் பரவி பாய்ந்து கொண்டிருந்தது பார்க்க போனால் வருஷத்தில் மோசமான நேரத்தில் அந்த ஆற்றண்டைக்கு வந்தது போலிருந்தது. ஆனால் இருந்தபோதிலும் அவன் ஆபிரகாமின் வித்தாய் இருந்தான். அவனுக்கு ஒரு வாக்கு தத்தம் உண்டு என்றும் தானும் ஒரு கடமையின் வரிசையில் இருக் கிறேன் என்பதையும் அறிந்திருந்தான். அதை எப்படி செய்ய வேண்டுமென்று தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை தந்திருந்தார் அவன் அந்த ஆற்றின் வாசலை சுதந்தரித்துக் கொண்-ன் கதவுகள் படாரென்று திறந்தவுடனே, தண்ணீர் எதிராய் மலை களுக்கு மேல் ஓடிற்று. யோசுவாவும் இஸ்ரவேலரும் பகைஞனின் வாசல்களை சுதந்தரித்து, வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத் திற்குள் கடந்து போனார்கள். ஏனென்றால் அப்படி செய்யும் படியாய் தேவன் அவர்களுக்கு சொல்லியிருந்தார். ஆபிரகாமின் உண்மையான வித்து! 24சகோதரர்களே சகோதரிகளே அவன் அப்படி அதை கடந்து அக்கரை போனபோது, மூன்று இரதங்கள் ஓடக்கூடிய அளவிற்கு கனமாயுள்ள அவர்களை சூழ்ந்து கொண்ட எரிகோ இருந்தது. கடனாக வாங்கினதும், பொறுக்கிக் கொண்டதுமான பட்டயங்களும், கோல்களும் கற்களையும் வைத்துக் கொண்டு இந்த இஸ்ரவேலர் எப்படி அதற்குள் போகப் போகிறார்கள்? அவன் இன்னமும் ஆபிரகாமின் வித்தாய் இருந்தான். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை தந்து அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்று சொல்லி : 'ஒரு எக்காளத்தை முழங்குங்கள்“ என்று சொன்னார். ஆமென். அவ்வளவுதான், அது ஒரு ஆரவாரத்தை எழுப்பி, மதில்சுவரை நோக்கி ஒரு பவனியாய் போ, வாசல்கள் உங்களுக்கு முன்பாக விழுந்துபோம்'' ஆமென். அவன் ஆபிரகாமின் ஒரு இராஜரீக வித்தாயிருந்தான். அவன் தேவனுடைய உண்மையான விசுவாசியாயிருந்தான். ''வாசல்கள் உங்களுக்கு கீழே விழும். வெறும் ஓர் ஆரவாரத்தை எழுப்பி, எக்காளத்தை ஊது . நீ செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவே.'' என்ன நடந்தது? வாசல்கள் விழுந்தன. யோசுவா பட்டணத்தைக் கை பற்றினான், 25கொஞ்சம் கழித்து நாம் பார்ப்போமானால், எதிராளி முறிந்து தொடர்ந்து போர் செய்துக் கொண்டிருக்கிறான் சூரியனையுங்கூட அதன் பாதையில் அவர் நிறுத்தினார் என்று பார்க்கிறோம். ''நம்பமுடியாதது, ஆனாலும் உண்மை '' யென்ற செய்தியில் அன்று காலை நான் பேசினது போன்று. அவனுடைய பகைஞனின் வாசல்களை சுதந்தரிக்குமட்டாய் அவர் சூரியனை நிறுத்தினார். ஆமென். அந்த எதிராளிக்கு மட்டும் மீண்டும் திரண்டு சேருவானேயானால், அவர்கள் சிதறடிக்கப்பட் டிருந்தார்கள். சூரியனோ கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களை மறுபடியுமாய் சிதறடிக் கின்றது என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும் என்று அவன் அறிந்திருந்தான். அங்கே ஒரு காரியம் தான் பற்றிக் கொண்டிருக் கிறது. அதாவது நேரம். அவன் நேரத்தை நிறுத்தினான். ஆமென ஆமென்! அவனை வாக்குதத்தத்திலிருந்து தூரவைத்துக் கொண் டிருக்கிறது ஒரே ஒரு காரியம். அது சூரியன் இயற்கையானது கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. அவன் இயற்கையை நிறுத்தினான் . ஏன்? அவன் ஆபிரகாமின் ஒரு வித்தாய் இருந்தான். அவன் தேவனுடைய வாக்குதத்தத்தை விசுவாசித்தான். அவர் அவனை நிறுத்தி வாசல்களை சுதந்தரித்தான். ஆம் ஐயா. இந்த பெரிய மனிதர்கள், இவர்கள் யாவரும் மனிதர்கள்தான். அவர்கள் யாவரும், உங்களுக்கு தெரியுமா, அவர்கள் ஒவ்வொருவரும், மரணத்தின் வாசலண்டை வந்தபோது அவர்களெல்லாரும் மரித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மரிக்கத்தான் வேண்டும். அவர்கள் பெரிய மனிதர்களாய் இருந்த படியினால் “அவர்கள் சிங்கங்களின் வாய்களை கட்டினார்கள், அக்கினிக்கு தப்பினார்கள். பட்டயத்தின் கருக்கிற்கு தப்பினார்கள். இன்னும் பல நமக்கு எபிரேயர் 11ல் சொல்லப்பட்டிருக்கின்றது. அவர்கள் பகைஞனின் வாசல்களை ஒன்றை தவிர எல்லாவற்றையும் சுதந்தரித்தார்கள். அந்த ஒன்று மரணம். அவர்கள் ஒவ்வொரு வரையும் மரணமானது விழுங்கி போட்டது. 26அதன் பின்பு ஒரு நாள், விசுவாசத்தின்படியான ஆபிரகாமின் வித்தும், தேவகுமாரனும், ஆபிரகாமின் இராஜரீக வித்துமான இயேசு கிறிஸ்து வந்தார். இயற்கையான வித்தாகிய ஈசாக்கின் மூலமாய் அல்ல, அவர்களுடைய பங்கை அவர்கள் செய்தார்கள். ஆனால் இதோ ஒருவர் வருகிறார். அவர் இயற்கை யாய் பிறவாதவர் . இதோ ஒருவர் வருகிறார். அவர் இனச்சேர்க்கை யில்லாமல் பிறந்தவர். கன்னி பிறப்பில் வந்தவர். இதோ வருகிறார். தேவகுமாரன், ஆபிரகாமின் வித்து. இப்பேர்ப்பட்ட பெரிய மனிதர், மற்ற இயற்கையானவர்கள் யாவரும் இயற்கையான பிறப்பால் பிறந்தவர்கள். இந்த மனிதன் கன்னி பிறப்பால் வந்தவர். அவர் இப்பூமியின் மேல் வந்தபோது என்னச் செய்தார்? சாத்தானிடம் இருந்த ஒவ்வொரு எதிராளியையும் ஜெயித்தார். அவர் சகலவற்றையும் ஜெயித்தார் : அவர் என்னச் செய்தார்? அவர் புறப்பட்டு போய் வியாதியை ஜெயித்தார். அவரை சுற்றிலும் வியாதியேயில்லாமல் இருந்தது; வியாதி எங்கெல்லாம் இருந்ததோ, அவர் அதை ஜெயித்தார். அவர் அதை ஜெயித்த பின்னர் என்ன செய்தார்? ''நீங்கள் பூமியில் எதை கட்டுகிறீர்களோ நான் அதை பரலோகத்திலே கட்டுவேன்,'' என்று சொல்லி, ஆமென் அவர் திறவுகோல் களை நம்மிடம் கொடுத்தார். ஓ! ஆமென்! அது தான் ஆபிரகாமின் இராஜரீக வித்து, அவருடைய வாக்குதத்தம். பரிசுத்தாவியானவர் இப்பொழுது நமக்குள்ளாக இருந்துக் கொண்டு வியாதிக்கு நேராக திறவுகோல்களை கொண்டவராக இருக்கிறார். அவர் வியாதியை ஜெயித்தார். அவருடைய சமூகத்திற்கு முன்பாக வியாதி நிற்க முடியாது. நாம் அதே காரியத்தை செய்யும்படியாய் வியாதியை ஜெயிக்கும்படியாய் அவர் நம்மிடம் திறவுகோல்களை கொடுத்திருக் கிறார். “பூமியில் நீங்கள் எவைகளை கட்டுகிறீர்களோ நான் அதை பரலோகத்திலே கட்டுவேன்.'' சோதிக்கப்படுதலிலும்கூட, எல்லா விதத்திலும் அவர் நம்மை போல் சோதிக்கப்பட்டார். அவர் என்னச் செய்தார்? அவர் அதை ஜெயித்தார். அவர் நம்மிடத்தில் என்னச் சொன்னார்? 'பிசாசை எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்“ அவர் வியாதியை நமக்காக ஜெயித்தார். அவர் சோதனையை நமக்காக ஜெயித்தார். வாசல்களை உடைத்தார். சோதனைக்காரனிடத் திலிருந்து திறவுகோல்களை எடுத்துக் கொண்டு அதை ஆபிரகாமின் வித்தான ஒரு விசுவாசியிடம் கொடுத்து ''அவன் உங்களை சோதித்தால், அவனை எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்'' ஓ! அப்பா! அவனை எதிர்த்து நில்லுங்கள்? 27அவர் பாதாளத்தையும், மரணத்தையும் இரண்டையும் ஜெயித்தார். அவர் மூன்றாம் நாளில் ''நான் ஜெயித்தேன் நான் ஜீவிக்கிறபடியினால், நீங்களுங்கூட ஜீவிக்கிறீர்கள்'' ஓ! என்ன ஒரு வாக்குத்தத்தம்! அது ஆபிரகாமின் வித்திற்கு, அவர் பாதாளத்தை ஜெயித்து, நம்மை நீதிமானாக்கும்படியாக மூன்றாம் நாளில் எழுந்தார். அவர் அப்படி எழும்பினபோது அவரே நம்முடைய நீதியானார். அது நம்மை என்ன வாக்கிற்று? அவர் வியாதியை ஜெயித்தார். அவர் மரணத்தை ஜெயித்தார். அவர் நரகத்தை ஜெயித்தார். அவர் பாதாளத்தை ஜெயித்தார். அவர் சோதனையை ஜெயித்தார். ஓ! நாம் ஆபிரகாமின் இரா ஜரீக வித்தாயிருக்கின்ற படியினால், நம்மில் அன்பு கூர்ந்து, நமக்காக தம்முடைய ஜீவனை தந்த அவராலே இப்பொழுது நாம் முற்றிலும் ஜெயங் கொள்ளு கிறவர்களாய் இருக்கிறோம். அவருக்குள்ளாக இருந்த அதே, தேவனுடைய ஆவியை நமக்குள் கொண்டவர்களாய் நாம் முற்றிலும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். எல்லா கதவும் நமக்காக ஜெயிக்கப்பட்டாயிற்று. நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அதை சுதந்தரிக்க வேண்டும். அது ஏற்கனவே ஜெயிக்கப்பட்டாயிற்று. வியாதி ஜெயிக்கப்பட்டாயிற்று மரணம் ஜெயிக்கப்பட்டாயிற்று' நரகம் ஜெயிக்கப்பட்டாயிற்று. பாதாளம் ஜெயிக்கப்பட்டாயிற்று. எல்லாக் காரியங்களும் ஜெயிக்கப் பட்டாயிற்று. அவருடைய கிருபையினாலே நாம் திறவுகோல்களை உடையவர்களாயிருக்கிறோம். அவர்களிலே திறவுகோலை போட்டு ''நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வருகிறேன்“ என்று சொல்ல பயப்படுகின்றாயா? ”நீங்கள் என் நாமத்தினாலே பிதா வினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ.''.... நான் அவரை நேசிக் கிறேன். 28இரண்டு ஆயிரம் வருஷங்களுக்கு பிறகு, 2000 வருஷங் கள் இன்னமும் அவர் நமது மத்தியில் வல்லமையுள்ள ஜெயிக் கிறவராயிருக்கிறார். அவர் திரைச்சீலையை இரண்டாக கிழித்து எல்லா வியாதியையும், எல்லா நோயையும், எல்லாவற்றையும் தாமே சுமந்து, நம்முடைய பலவீனங்களையும், வியாதியையும், நோயையும் தாமே சிலுவையில் சுமந்து, அவைகளின் மேல் வெற்றி சிறந்து, நம்முடைய நீதியாய் உயிர்த்தெழுந்து, இரண்டாயிரம் வருஷங்களுக்கு ஜீவனுள்ளவராய், நின்று, எல்லா வற்றிற்கும் சுதந்திரரான, ஆபிரகாமின் இராஜரீக வித்தின் மத்தியில் ஜீவிக்கின்ற இயேசு கிறிஸ் துவாய், தம்மை தாமே வெளிப்படுத்தினார். ஓ! இதற்கு பிறகு வந்தவர்கள் அந்த சோதனைக்குள்ளாக வார்த்தையின் வாக்குதத்தத்திற்குள் போகிறார்கள்! உங்களால் வார்த்தையை விசுவாசிக்கக் கூடுமானால், நீங்களும்கூட ஆபிரகாமின் வித்தாயிருக்கிறீர்கள். அவ்விதமாக தான் நீங்கள் அதற்குள்ளாக வருகிறீர்கள். 29உங்களால் அந்த வார்த்தை பரிசோதனையை எடுக்க முடியவில்லையென்றால், நீ அதை அவிசுவாசத்தால், அதை குறித்து சற்று சந்தேகம் உண்டானால், உன்னால் அதை விசுவாசிக்கவே முடியாது. ஏதோ ஒன்றினால் உன்னால் விசுவாசிக்க முடியவில்லை, அப்படியானால் நீ ஜெபவரிசையில் வரவேண்டாம். தேவனுடைய வார்த்தை சத்தியம் என்று நீ அறிந்துக் கொள்ள உனக்கு போதுமான அளவு கிருபை கிடைக்குமட்டாய், நான் பீடத்தின் மேல் வீணாயிருக்க வேண்டுவதில்லை. அந்த விசுவாசத்தின் திறையின் ஊடாக மட்டும் உன்னால் போக முடியும்போது, அப்பொழுது உன் கரங்களில் அந்த திறவு கோல்கள், பாதாளம், நரகம் மரணம் என்பவைகளின் திறவு கோல்கள் இருக்கின்றது. ஏனென்றால் நீ ஒரு ஜெயிக்கிறவரை உடையவராய் இருக்கின்றாய். உனக்காக யார் ஜெயித்தது? அப்படி யானால் உன்னிடத்தில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்'' என்று சொல்லுகின்ற (எபி 13:3) உண்டு. நாம் அதை எப்படி செய்வோம்? 30இன்றைக்கு ஜனங்கள் “ஓ! சரி; நான் உனக்கு சொல்லு கிறேன்....... ஒரு விதத்தில்....அவர். அப்படி இருக்கிறார்'' என்று சொல்லுகிறார்கள். 'அவர் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் சொல்லுகிறது “ஓ! அதுசரி! அவர் அன்று செய்தது போன்று இன்று செய்வது கிடையாது.'' அவருடைய வார்த்தை ரூபகாரப்படுத்தப்படும் போது, நாம் இப்பொழுதே காண்கிறோம். அது என்ன செய்கிறது? அது மறுபடியுமாக அதை அவர்களுடைய மடியிலேயே போடுகிறது. ஆமென். ஆபிரகாமினுடைய உண்மையான வித்து அதை விசுவாசிக்கின்றது. அவர்கள் அதை அறிவார்கள் அவர் ஆபிரகாமை லோத்தின் நாட்களிலே சந்தித்து, அவருடைய முதுகிற்கு பின்னால் சாராள் சொன்னதை அப்படியே அவர் சொல்லி காட்டி செய்த அற்புதத்தை போன்று அவர் இன்று இரவு இங்கே நின்றுக் கொண்டு அதையே செய்து காட்டினார். அவருடைய வருகைக்கு முன்னர் சபையானது அதே காரியத்தை மீண்டும் காணும் என்று இயேசுவானவர், ஆபிரகாமின் இராஜரீக வித்திற்கு வாக்களித் திருக்கிறார். அது என்ன? அது சம்பவிக்க வேண்டியதே. தேவன் அதை வாக்களித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து அதை உறுதிபடுத்தி அது அப்படியே இருக்குமென்றார். இதோ இன்று நாம் இங்கே 2000 வருஷங்களுக்கு பிறகு அவர் வல்லமையுள்ள ஜெய வீரராய் நமது மத்தியில் காண்கிறோம்! அவர் மரணம், நரகம், பாதாளம். எல்லா மூடநம்பிக்கைகளையும் ஜெயித்து வார்த்தையை எடுத்தார். 31“நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்து இருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ. அது உங்களுக்கு செய்யப்படும்.'' என்று அவர் சொன்னார். அது என்ன? உன் இருதயத்தில் இருக்கின்றதான, அந்த வார்த்தை , கிறிஸ்து, நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைக் கொண் டிருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் ஜெயித்துவிட்டீர்கள், ஏனெனில் உனக்காக நான் அதை ஜெயித்து விட்டேன். நீங்கள் என்னில் இருந்தால், உன்னால் என்னை புரிந்துக் கொள்ளமுடியும், நீங்கள் என்னில் இருந்தால் என்னை விசுவாசிக்கிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன், ஏதோ வெளித்தோற்றமான விசுவாச மல்ல, ஆனால் ஏற்றுக்கொள்ளக் கூடியவன். என்னுடைய வார்த் தையை விசுவாசிக்கிறவன், என்னுடைய வார்த்தைகளை புரிந்து கொண்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு. அவன் சோதனைக்குள்ளோ அல்லது ஆக்கினைக் குள்ளோ தீர்க்கப்படாமல் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறான்.'' அதோ இருக்கிறார் அந்த வல்லமையுள்ள ஜெயங்கொண்டவர். 32நேற்றும் இன்றும் என்றும் மாறாத அவர் இதோ இங்கே இருக்கிறார். அவர், பாபிலோனிலிருந்து வெளியே அழைக் கப்பட்டு, சோதோமிலிருந்து வெளியே அழைக்கப்பட்டு, உலகத்தி விருந்து வெளியே அழைக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டதுமான ஆபிரகாமின் வித்திற்கு முன்பாக அவருடைய வாக்குதத்தத்தை அப்படியே நடந்தேற இங்கே செய்துகாட்டுகிறார். இருதயத்தின் சிந்தனைகளையும், உள்ளிந்திரியங்களையும் வகையறுக்கக் கூடிய தான தேவனுடைய வார்த்தை , வல்லமையான ஜெயவீரர் 2000 வருஷங்களுக்கு பிறகு, இன்றிரவு, நமது மத்தியில் இங்கே நிற்கிறார். அது என்ன? ''உன்னுடைய வித்து பகைஞ னின் வாசல்களை சுதந்தரிக்கும்''. அது என்ன? வார்த்தை விசுவாசிக் கின்ற, இராஜரீகவித்து, ஆபிரகாமின் வித்தாய் அது இருக்கிறது வார்த்தை தேவனாயிருக்கிறது. 33இப்பொழுது நாம் இதை காணும்போது, பண்டைய புலவரோடு சேர்ந்து, அவர்களோடு சத்தமிட வேண்டும் போலிக்கின்றது. ஜீவிக்கும் போது அவர் என்னை நேசித்தார் , மரிக்கும் போது அவர் என்னை இரட்சித்தார் உயிர்த்தின போது என்றென்றைக்குமாக அவர் நீதிமானாக்கினார் என்றோ ஒருநாள் அவர் வருகின்றார் ஓ! மகிமையின் நாள். யாரோ ஒருவர் “தம்பி உனக்கு வயதாகிக்கொண்டே போகிறது” என்றார். அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. ஒரு சின்ன பையனாயிருந்ததிலிருந்து இருக்கிறேன். நான் சாதிக்காவண்டிய சாதனை என்று எனக்கு ஒன்று இருக்குமாயின் அது (achievement) என்னவென்றால் இயேசுகிறிஸ்து வரு கின்றதை காணவேண்டும். அந்த நோக்கத்திற்காக என்னுடைய ஜீவியத்தை கொடுத்தேன். ஒரு வயதான மனிதனாய். நான் இன்னமும் பீடத்தில் இருக்கிறேன். அதே காரியத்தை விசுவாசிக் கிறேன். நான் நினைக்கக்கூடிய பெரிய காரியம் என்னவென்றால், அவருக்கு சொந்தமானதை ஏற்றுக் கொள்ளும்படியாய் இயேசு கிறிஸ்துவானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதை காண வேண்டும் என்பதே. நாம் இப்படி பாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இயேசுவின் நாமத்தை எல்லாரும் ஆர்ப்பரியுங்கள் தூதர்கள் சாஷ்டாங்கமாய் பணிவார்களாக இராஜரீக கிரீடத்தை கொண்டுவந்து எல்லாவற்றிற்கும் கர்த்தாவாய் முடிசூட்டுங்கள். 34ஏன்? அவர் தான் வல்லமையுள்ள ஜெயவீரர். நீ அவருக்குள் நிலைத்திருந்தால், நீ வார்த்தையிலிருக்கிறாய். அவர் சொன்னார் நீங்கள் என்னில் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டு கொள்வதெதுவோ,'' ஏனென்றால் எல்லா கதவும் ஜெயித் தாயிற்று . அப்பொழுது நாம் சொல்லமுடியும். புத்தகத்திலுள்ள வாக்குதத்தங்களெல்லாம் என்னுடையவை எல்லா அதிகாரமும், எல்லா வசனமும், வரியும் அவருடைய தெய்வீக வார்த்தையில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன் ஏனெனில் புத்தகத்திலுள்ள வாக்குத்தங்களெல்லாம் என்னுடையவை. நண்பர்களே, அது என்னவென்று நீங்கள் உணரு கிறீர்களா? ஆபிரகாமுக்கு தேவன் பண்ணின எல்லா வாக்கு தத்தமும், தீர்க்கதரிசிகள் மூலமாய் உரைக்கப்பட்ட எல்லா வாக்குதத்தமும், இந்த நாட்களுக்கென்று இயேசு கிறிஸ்து வாக்கு பண்ணின எல்லா வாக்குதத்தமும் அதை உறுதிபடுத்தவும் அவர் என்றைன்றைக்கும் ஜீவிக்கிறார் என்றும் காண்பிக்கும் படியாகவும், அவர் இங்கே இருக்கிறார். ''உன்னுடைய வித்து பகைஞரின் வாசலை சுதந்தரிக்கும்.'' 35மரணத்திற்கான வேளை வரும்போது “அதை குறித்து என்னவென்று'' நீ சொல்லலாம்? பவுல் சொன்ன அந்த சுதந்தரத்தை நீங்கள் இன்னமும் உடையவர்களாயிருக்கிறீர்கள். ”ஓ பாதாளமே உன் ஜெயம் எங்கே. ஓ! மரணமே உன் கூர் எங்கே? ஆனால் அந்த வல்லமையுள்ள வெற்றிவீரரான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு ஜெயத்தை கொடுக்கின்ற தேவனுக்கு நன்றி உண்டாவதாக.“ ஓ! தூதர்கள் சாஷ்டாங்கமாய் பணிவார்களாக இராஜரீக கிரீடத்தைக் கொண்டு வந்து எல்லாவற்றிற்கும் கர்த்தாவாய் முடிசூட்டுங்கள். இன்றிரவு, 2000 வருடங்களுக்கு பிறகு இன்றும் அவரை காணும்படியாய் நிற்கிறோம். அவர் தேவனுடைய வாக்குதத்தத் திலிருந்து பிரித்த திரையை கிழித்து வெற்றிவீரராக இருக்கிறார். நாம் அவருக்குள் ஜெயங் கொண்டவர்களாயிருக்கிறோம். ஜெபம் செய்வோம். 36பரலோக பிதாவே, அந்த மகா பெரிய இயேசுகிறிஸ்து என்ற நபரில் ஆவியின் ரூபத்தில், பரிசுத்தாவியின் சமுகத்தில் இன்று இரவு நாங்கள் நிற்கிறோம். அவர் இராஜரீக வித்தாகிய, ஆபிரகாமின் வித்தின் மேல் வருவேன் என்று வாக்களித்திருக்கிறார் ஓ! தேவனே! ஒரு மனிதனோ மனுஷியோ, பையனோ பெண்ணோ உம்மை அறியாதவர்களாய் இங்கே இருப்பார்களேயானால்; தேவனுடைய வார்த்தையை குறித்து அது உண்மையா இல்லையா என்று ஏதாவது சந்தேகமோ, குழப்பமோ மனதில் கொண்டவர் களாயிருப்பார்களேயானால், அவர்களுக்காக ஜெபிக்கிறோம். ஓ! பெரிய தேவனே! வாக்குதத்தத்தை பண்ணினவரே; இன்றிரவு வாரும்! கர்த்தாவே நீர் செய்த வாக்குதத்தங்களில் பெரியதொரு வாக்குதத்தம் உண்டு. அந்த வாக்குதத்தத்தை உம்மால் காத்துக் கொள்ளக்கூடும்“ நான் என் பிதாவினிடத்திற்கு போகிற படியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்'' என்று நீர் சொன்னீர். பிதாவாகிய தேவனே, உம்முடைய வார்த்தையை நீர் உறுதிபடுத்துவீர் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஆபிரகாமின் பிள்ளைகளில் அநேகர் இன்றிரவு இங்கே வியாதியாய் இருக்கிறார்கள். ஓ! பிசாசு அவர்களுக்கு கதவு போட்டு அவர்களை உள்ளே வைத்துவிட்டு சாவியை திருப்பி பூட்டி ''இப்பொழுது நீ மரிக்கத்தான் வேண்டும் உனக்கு இருதய நோய் இருக்கிறது. உனக்கு இது இருக்கின்றது அல்லது அது அல்லது மற்றெதுவோ ஒன்று இருக்கிறது. நீ மரிக்கத்தான் வேண்டும்'' என்று சொல்லுகிறான். 37ஓ! தேவனே! ஒவ்வொரு அடிமையும் விடுதலையாகி போகும்படியாக இன்றிரவு சுவிசேஷத்தின் யூபிலி எக்காள சத்தம் முழங்கட்டும்! இயேசு கிறிஸ்துவானவர் அந்த வாசல்களை ஜெயித்து விட்டார். அந்த திறவுகோல்களை நாம் நம்முடைய கைகளில் உடையவர்களாயிருக்கிறோம். ஓ! “ என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள். என் நாமத்தினால் நீங்கள் எதை கேட்டாலும், நான் அதை செய்வேன், என்னை விசுவாசிக் கிறவன், நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் உறுவகுத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனை களையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.'' நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும். ஏனெனில் அவர்கள், புசித்தார்கள் குடித்தார்கள் பெண் கொண்டும் கொடுத்தும்; பெரிய கட்டிட திட்டங்களை வகுத்துமிருந்தார்கள். நாம் உலகத்தை கவனிப்போம்'' வானத்தில் அடையாளங்களும் பயங்கரமான காட்சிகளும் உண்டாயிருக்கும் (இது பறக்கும் தட்டுகள், அநேக இடங்களில் பூமியதிர்ச்சிகளும், கடல் கொந்தளிப்பும் (உயரமான அலைகள்), மனிதர்களுடைய இருதயங்கள் (பயத்தால்) சோர்ந்து போம், தேசங்களுக்கிடையே தொந்தரவு, தவிப்பான நேசமுமா யிருக்கும்'' ''லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் இருக்கும்.'' ஓ தேவனே இன்றிரவு வந்து உம்முடைய வார்த்தையை செய்துகாட்டும், இன்றிரவு வந்து ஆபிரகாமின் பிள்ளைகளின் விசுவாசத்தை கனப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இதை கேட்கிறோம். ஆமென். 38கர்த்தர் உங்களை பெருக்கமாய் ஆசீர்வதிப்பாராக. இந்த நேரத்தில் நான் பீடத்து அழைப்பை விடுக்கப் போவதில்லை. அதை நான் உங்கள் வசமே விட்டுவிடப் போகின்றேன். அநேக நேரங்களில் நான் அப்படி செய்திருக்கிறேன் எனக்கு அதில் விசுவாசம் உண்டு, “அவரை ஏற்றுக்கொண்ட அத்தனை பேரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.'' அதுதான் ”அவரை ஏற்றுக் கொண்ட அத்தனை பேரும் “நாம் வியாதியஸ்தருக்காய் ஜெபிக்கப் போகிறோம். இரவு முழுவதுமாக என்னால் பேசமுடியும். நீங்கள் ஒரு அருமையான கூட்டத்தார். ஆனால் நான் சொல்லுகின்றதெல் லாம், ஒரு மனிதனாய் சொல்லுகின்றேன். ஆனால் நான் அவருடைய வார்த்தைகளை சொல்லும்போது, அப்பொழுது அவைகள் என்னுடைய வார்த்தைகளல்ல, அது அவருடைய வார்த்தைகள். நான் எதையாவது சொல்லி, தேவன் அதை ஆமோதிக்கவில்லை யென்றால் அப்பொழுது அது என்னுடைய வார்த்தைகள் ஆகும். நான் அவருடைய வார்த்தைகளை சொல்லி, அவர் அதை ஆமோதிப்பாரானால், அது அப்படியல்லவென்று அந்த பாவமுள்ள மனிதனோ மனுஷியோ பையனோ பெண்ணோ சொல்லிக் போய் விடக் கூடுமோ? 39இயேசு இந்த காரியங்களை செய்த போது “இவன் ஒரு குறிச் சொல்லுகிறவன் அவன் ஒரு பிசாசு” என்று அவர்கள் சொன்னார்கள் என்று இயேசு சொன்னார். குறிச் சொல்லுகிறவன், குறிசொல்லுதல் பிசாசினாலானது என்று யாருக்காவது தெரியுமா. “அவர் ஒரு குறிகொல்லுகிறவர்' என்று அவன் சொன்னான். ஒரு குறி சொல்லுகிறவன் எப்பொழுதாவது சுவிசேஷத்தை பிரசங்கித்ததை பார்த்திருக்கிறீர்களா? குறிச் சொல்லுகிறவன் பிசாசுகளை துரத்துகிறதை நீங்கள் எப்பொழு தாவது கண்டிருக்கிறீர்களா? இல்லை நிச்சயமாக அவர்கள் அதை செய்கிறதில்லை. “இப்பொழுது, மனுஷகுமாரனாகிய நான் இதை உங்களுக்கு மன்னிக்கிறேன். ஆனால் பரிசுத்தாவியானவர் வரும் போது, அதற்கு எதிராக பேசுவது இம்மையிலும் மறுமையிலும், மன்னிக்கப்பட மாட்டாது. ஏனென்றால் அது தேவனுடைய கிரியையை அசுத்த ஆவி என்று அழைக்கின்றபடியினாலே'', என்று அவர் சொன்னார். 'தேவனே, இன்றிரவு எங்கள்மேல் கிருபையாயிரும். தேவன் தாமே இறங்கி வந்து இந்த வார்த்தையை உங்கள் முன்பாக உறுதிபடுத்தும்படி{நான் ஜெபிக்கிறேன், 40சகோதரனே, சகோதரியே, இது என்னுடைய ஆத்துமா. நரன் தேவனை சந்திக்க வேண்டும். நான் உங்களுக்கு சொல்லுகின்றவைகளுக்கு நான் உத்தரவாதியிருக்கிறேன். தேவன் என்னிடத்தில் அதற்கு உத்தரவாதம் கேட்பார். அதுசரி. நான் என்னுடைய ஆத்துமாவை நரகத்திற்கு உள்ளாக்குகிறேன் என்று அறிந்தவனாய் இவைகளை நான் உனக்கு சொல்லுவதில் எனக்கு என்ன நன்மை உண்டாகப் போகிறது. ''மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகின்ற வழி உண்டு. அதன் முடிவோ மரண வழிகள்“ தேவனுக்கு ஒரு வியாக்கியானி தேவை இல்லை. நான் சொன்னது போன்று அவர் அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்கிறார். ஆபிரகாமின் வித்து பகைஞனின் வாசலை சுதந்தரிக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 41என்னால் மட்டும் உங்களை சுகப்படுத்தக் கூடுமானால் நான் அதை செய்திருப்பேன். கிறிஸ்து உன்னை ஏற்கெனவே சுகமாக்கிவிட்டார். ஒரே ஒரு காரியம், அந்த திறவுகோலை நீ உன் கையில் வைத்திருக்கிறாய். அதை நீ பற்றிக் கொள்ள அந்த திறவு கோலானது உன்னுடைய விசுவாசமாய் இருக்கிறது. இன்றிரவு அதை திற, நீ செய்யமாட்டாயா? எல்லா வியாதியையும் ஜெயித்தவரான, அந்த வல்லமையுள்ள ஜெயவீரர், நம்முடைய மத்தியில் அவர் வரும் போது, இங்கே வந்து அவர் தான் அதை செய்தார் என்று உனக்கு காட்டும் போது, திற, ஏனெனில் அவர் இன்னமும் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தையானது நம்முடைய இருதயத்திலிருக்கும் சிந்தனைகளை வகையறுக்கிறது.'' 42. என்ன ஜெப அட்டை B. எதிலிருந்து நாம் துவக்குகி றோம் நேற்றிரவிலிருந்து? நாம் 50லிருந்து துவங்குவோம், யாரிடத் தில் ஜெப அட்டை B-50 இருக்கின்றது? உங்கள் கரங்களை 'உயர்த்துங்கள். ஜெப அட்டை B அன்றிரவு நாம் ஒன்றிலிருந்து ஆரம்பித்தோம். இப்பொழுது நாம், இன்றிரவு 50லிருந்து ஆரம்பிக்கப் போகிறோம். யாரிடம் B 50 இருக்கின்றது? உன்னுடைய கையை உயர்த்து. ஜெப அட்டை B50. B31 யாரிடமுள்ளது? B51-சரி 352 யாரிடமுள்ளது B52? சரி உங்களிடமுள்ளதா? B531, 54, நேராக இங்கே வாருங்கள் 54, 55 என் மகன் நான் இங்கே வருவதற்கு முன்னால் வந்து சில ஜெப அட்டைகளை ஒன்றாய் கலக்கி கொடுப்பான். அது எப்படி இருக்கிறதென்று பாருங்கள். ஒன்று இங்கேயும் ஒன்று அங்கேயு மாக இருக்கின்றது. அவர்களுக்கு அது தெரியாது. நீங்கள் ஒரு வேளை இந்த வரிசையாக வந்து ஒன்றாவது எண்ணை பெறலாம், உனக்கு அடுத்தவர் 10ஐ பெறலாம். இன்னொருவர் 25ஐ பெறலாம். அது அங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது ஆனால் எங்கிருந்தாலும் சரி. இப்பொழுது எத்தனை பேரை அழைப்போம்? 5 நான்கு? B50 B50 இல்லையா? 50லிருந்து 55 வரை 56, 57, 58, 59, 6) இப் பொழுது நாம் பார்ப்போம். அவர்களை எண்ணுங்கள் பில்லி 60, 70 அவர்களை நிற்க சொல்லுங்கள். B50லிருந்து 70, 75, அவர்களை எண்ணுங்கள். சகோதரன் ராய் உங்களால் கூடுமானால் நான் ஜனங் களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். 43இந்த பக்கமாக பார்த்தவாறு உங்களில் எத்தனை பேரிடத்தில் ஜெப அட்டைகளில்லை. “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள். அது உண்மை தானா? அது உண்மைதான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆபிரகாமின் வித்து அப்படியே சொல்லுகிறது. வேதம் சொல்லுகிறது “அவர் ஒரு பிரதான ஆசாரியன்'' என்று எபிரேயர் 4ம் அதிகாரம் நம்முடைய பலவீனங்களை குறித்து பரிதபிக்கக்கூடிய ஒரு பிரதான ஆசாரியனா யிருக்கிறார்'' நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால் அவர் அதை எப்படிச் செய்வார்? வேதத்தில் பார்க்கிறோம் ஒரு சிறிய ஸ்திரி இருந்தாள். நான் சொல்லுகின்றதை கவனிக்கும் போது தெரியும். ஒரு சிறிய. ஸ்திரி, ஒரு வேளை அவளிடம் ஜெப அட்டை இல்லாமலிருக்கலாம் ஆனால் அவள் தன் இருதயத்தில் 'நான் அவரை விசுவாசிக் கின்றேன். என்னால் மட்டும் அவரை தொடக்கூடுமானால்'' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் தன்னிடமிருந்த எல்லா வற்றையும் வைத்தியர்களிடம் செலவழித்து விட்டாள். அவர் களால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை. அவளுடைய காரியமோ மிகவும் பெரியதாய் இருந்தது. அவர்களால் உதவி செய்ய முடியாமற் போயிற்று. ஆனால் தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்று அவள் விசுவாசித்தாள். அவள் அவருடைய வஸ்திர தொங்கலை தொட்டாள். அவர் “என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்'' என்று சொன்னார். அது சரியா? இன்றிரவும் அவர் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் மரணத்தினின்று உயிர்த்தார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவர் மரணத்தினின்று உயிர்த்தெழுந்தார் என்று நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்? 44சமீபத்தில் ஒரு பெயர் போன பாப்டிஸ்ட் மனிதன் என்னிடம் வந்து ''சகோ பிரன் ஹாம் ஒரு சமயம் நான் ஒரு முகமதியனால் தோற்கடிக்கப் பட்டேன்! என்று சொன்னார். அந்த முகமதியன்! அவர் உயிர்த்தெழுந்திருப்பாராயின், அவர் அதே காரியங்களை செய்வேன் என்று வாக்களித்திருக்கிறார். அவர் செய்ய நாங்கள் அதை காணட்டும்'' என்று சொன்னான். பாருங்கள் அவர் அதை செய்யவில்லையென்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர் அதை செய்வார் என்று நாம் விசுவாசிக் கிறோம். அவர் மரணத்தினின்று உயிர்த்தார் என்று நாம் விசுவாசிக் கிறோம். கிறிஸ்துவத்தை தவிர, ஸ்தாபிதர் ஜீவித்துக் கொண்டிருக் கிறார் என்று நிரூபிக்கக் கூடிய ஒரு மதமும் உலகில் இல்லை. தேவன் அதை உறுதிபடுத்தி காட்டதக்கதான ஒரே வழி என்ன வென்றால் அதை விசுவாசிக்கிறவர்கள் மூலம் தான். அவருடைய வார்த்தையை தேவன் நடப்பித்து காட்டக்கூடிய ஒரே வழி, அதை விசுவாசிக்கிறவர்கள் மூலமாய்த்தான். . 45இங்கே அவர்கள் அந்த ஜெப வரிசையை ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கும்போ து எத்தனை பேர் வருவார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் இங்குமங்கும் போக வேண்டாம், உங்கள் இருக்கைகளில் அப்படியே தரித்திருந்து உங்கள் ஸ்தானத்தை பற்றிக் கொள்ளுங்கள். இந்த பக்கமாகப் பாருங்கள் “கர்த்தராகிய இயேசுவே நான் விசுவாசிக்கிறேன்'' என்று ஜெபியுங்கள். ''நீ சொல்வதை மட்டும் ஜனங்கள் விசுவாசிக்கும் படியாய் நீ செய்ய வைத்து உன்னுடைய ஜெபத்தில் உத்தமமாய் இருப்பாயானால் ''என்று அவர் என்னிடம் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா. அது இந்த 15 வருடங்களா தெரியும் ஒரு முறை கூட தவறி போன தில்லை . தவறிப் போக முடியாது. தேவனால் செய்ய முடியாதது ஒரு காரியம் அது தவறி போவது. அவர் தன்னுடைய வார்த்தையை காத்துக் கொள்ள வேண்டியவராயிருந்தார் நான் அதை விசுவாசிக்கிறேன். நான் இங்கே நிற்கிறேன் என்று நம்புவதை காட்டிலும் அதிகமாக, இந்த கட்டிடத்திலிருக்கிறேன் என்பதை காட்டிலும் அதிகமாக, இது கானல் நீராய் இருக்காது என்பதை காட்டிலும் அதிகமாக, இது ஒரு சொப்பனமல்ல என்பதை காட்டிலும் அதிகமாக நம்பு கிறேன். தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று என் ஆத்துமாவில் விசுவாசிக்கிறேன். நீ ஆபிரகாமின் வித்தாய் இருக்கிற படியினால், நீ கிறிஸ்துவுக்குள் மரித்த படியினால், நீ ஆபிரகாமின் வித்தாய் இருக்கிறாய். 46இங்கே சில கைகுட்டைகளிருக்கின்றன. விசுவாசிக் கின்ற ஜனங்களால் பெரிய வெற்றி நடந்திருக்கின்றது. இப் பொழுது நாம் தலைவணங்குவோம், அவர்கள் ஆயத்தமாக்க படுவதற்குள், இவர்களுக்காக நாம் ஜெபிப்போம். பரலோக பிதாவே, வேதத்தில் நாங்கள் போதிக்கப் பட்டிருக்கின்றோம். நீர் சொன்ன எல்லா வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிக்கின்ற ஜனங்கள் இங்கே இருக்கிறார்கள். கர்த்தாவே, சில நேரங்களில் அவர்கள் தடுமாறி திறவு கோல் துவாரத்தில் மோதுகிறார்கள். திறவு கோலை உடையவர்களாய் துவாரம் தெரியாமல் தடவுகிறார்கள். ஆனால், அது அங்கே தான் இருக்கிறது என்று விசுவாசிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தடவி கொண்டே இருக்கட்டும். அது அங்கே இருக்கின்ற படியால் அவர்கள் அதை கண்டுபிடிப்பார்கள். அந்த திறவு கோல் தான் சரியான சாவி. ''உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கூடும்“ இப்பொழுது பாடுகின்ற பாட்டை போன்று. வேதத்தில் சொல்லியிருக்கின்றது 'பவுல் தன் சரீரத்தின் மேலிருந்த உருமால்களையும் கைகுட்டைகளையும் எடுத்து, வியாதியஸ்தர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனுப்பினான். அசுத்த ஆவிகள் அவர்களை விட்டு ஓடி, அவர்கள் சொஸ்தமடைந் தார்கள்“ என்று. இப்பொழுது கர்த்தாவே பரிசுத்த பவுல் உம்மோடு கூட இருக்கிறான் என்று அறிவோம். ஆனால் அது அவனல்ல. அது கர்த்தாவே நீர் அவனுக்குள் இருந்தீர். “ஜீவிக்கிறது நானல்ல கிறிஸ்துவே எனக்குள்ளாய் ஜீவிக்கிறார்'' என்றான் அவன். இப்பொழுது இந்த தலைமுறைக்கும், நேற்றை போன்று நீர் இன்றைக்கும் கிறிஸ்துவாயிருக்கிறீர். இந்த கை குட்டைகளை தொட்டு நாம் ஜெபிக்கும் போது, நீர் எல்லா சத்துருவையும் தோல்வியுறச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோம். சத்துரு வானவன் தோல்வியுற்றான் என்று அவர்கள் அறியும் படியாக, அவர்களுக்கு விசுவாசத்தை தாரும், - ஒரு நேரத்தில் இப்பொழுது நாம் பேசினது போன்று இஸ்ரவேலர் தங்கள் வாக்கு தத்தத்தை அடையாதபடி சிவந்த சமுத்திரம் குறுக்கே வந்து துண்டித்தது. அவர்களோ கடமையின் பாதையில் இருந்தார்கள், ஒரு எழுத்தாளன் சொல்லுகின்றார். “தேவன் கோபக்கண்ணோடு அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக கீழே நோக்கிப் பார்த்தார் என்றும், கடலானது பயந்து தன்னுடைய கதவுகளை திறந்துக் கொண்டு ஓடிப் போய்விட்டது என்றும்'' எழுதுகின்றார். இன்றிரவு இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் கீழே பாரும். இந்த கைகுட்டைகள் வியாதியஸ்தர்கள் மீது வைக்கப்படும் போது, இன்றிரவு நாங்கள் அவைகளுக்காக விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கும் போது, சத்துரு எங்கள் விசுவாசத்தை காண்பானாக. அவர்கள் ஒவ்வொருவரும் விடுவிக்கப்படும்படிக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். 47இப்பொழுது - உங்களுடைய முழுகவனத்தையும் செலுத்தும் படியாய் கேட்கிறேன். ஒலிபெருக்கியிடம் இருப்பவர் யாராயிருப்பினும் சரி, ஒரு வேளை அதை அதிகமாக்கலாம். ஏனென்றால் ஒருகால்பரிசுத்த ஆவியானவர் இதை செய்வரானால் .........அவர் செய்வார் என்று நான் சொல்லவில்லை. யாராவது ஒருவர் இங்கே வந்து வியாதீயஸ் தரை சொஸ் தப்படுத்த என்னிடம் வல்லமையுண்டு என்று சொன்னால் , அதை விசுவாசிக்க வேண்டாம். எல்லா வல்லமையும் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றது. நீயும் நானுமல்ல. அவரே வெற்றி வீரராயிருக்கிறார். நாம் வெறுமனே அவர் செய்ததை ஏற்றுக் கொள்ளுகிறோம். இரட்சிக்கவோ சுகப்படுத்தவோ எந்த ஒரு மனுஷனிடத்திலும் வல்லமை கிடையாது. உலகிலுள்ள எல்லா மனுஷர்களுக்கான கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. தேவையானது செலுத்தப்பட்டாயிற்று. எவ்விதமாக?'' அவர் நம் முடைய மீறுதல்களுக்காக காயப்பட்டார் அவருடைய தழும்புகளால் நாம் சுகமானோம். உன்னுடைய சுகத்திற்காக செலுத்தப்பட்டாயிற்று. உன்னுடைய இரட்சிப் பிற்காக செலுத்தப்பட்டாயிற்று. வந்து அதை ஏற்றுக்கொள்ள உன்னிடத்தில் போதுமான விசுவாசம் இருக்கின்றதா? அவ்வளவு தான். உன்னிடம் ஆபிரகாமின் வித்து இருக்கிறது தேவன் அதை வாக்களித்திருக்கிறார். அது அங்கே இருக்கிறது என்று ஏதோ உனக்குள் இருக்கின்றது. அது இருக்கின்றது. 48வரம் என்றால் என்ன? வெளியே போய் ஜனங்களை சொஸ்தமாக்குவது ஒரு வரமா? வரம் என்று சொல்லப்படுவது என்னவென்றால் நீ வழியை விலகிக் கொண்டு, அதன் மூலமாய் தேவன் உன்னை உபயோகிக்க கூடியதென்பதே. இயேசுகிறிஸ்துவின் வாக்குதத்தத்தின்படி, ''சோதோம் பற்றி எரிவதற்கு முன்னால் இருந்தது போலிருக்கும்'' என்பதே கடைசி அடையாளம். மற்ற காரியங்கள் நடப்பதற்கு முன்பாக அல்ல. லோத்தினாலும் மற்றவர்களாலும் சுவிசேஷம் பிரசங்கிக்கப் பட்டது, அதுவல்ல. ஆனால் அது எரிக்கபட்டு போவதற்கு முன்னால் தேவன் ஒரு மனித உருவில் கீழே இறங்கி வந்து வாக்குதத் தத்தை உடையவர்களாயிருந்த ஆபிரகாமும் அவன் கூட்டமும் மான தெரிந்து கொள்ளப்பட்ட சபையோடு உட்கார்ந்தார். ஆபிரகாமினுடைய வித்து தான் இதை பெற்றுக் கொள்ளுகிறது என்பது நினைவிருக்கட்டும். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது நீங்களோ என்னை காண் பீர்கள் ஏனென்றால் நான் உங்களோடு கூட உங்களுக்குள்ளாக உலகத்தின் முடிவு பரியந்தம் இருக்கிறேன்'' என்று இயேசு சொன்னார். ஆனால் 'சோதோமில் இருந்தது போல“ அதற்கு முன்பாகவே அவர் வாக்குப் பண்ணினபடி மறுபடியும் வந்தார். சோதோம் என்னத்தை பெற்றுக் கொள்ளுகிறது, தெரிந்துக் கொள்ளப்பட்ட சபை என்னத்தை பெற்றுக் கொள்ளுகிறது என்று பாருங்கள். ''மனுஷகுமாரன் வரும் நாளிலும் அப்படியே இருக்கும் என்று அவர் சொன்னார். தேவன் மனுஷ உருவில் வெளிப்பட்டு, தம் முதுகிற்கு பின்னால் சாராளுடைய கூடாரம் இருக்க அந்த கூடாரத்திற்குள்ளாக சாராள் என்ன செய்தாள் என்று கூறினார். யாவரும் அது உண்மையென்று அறிவீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரியாக அப்படியே தான். இப்பொழுது அவர் அதை வாக்கு பண்ணியிருக்கிறார். நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். நினைவிருக்கட்டும் கடைசியாக சம்பவித்தது அதுவே. புற ஜாதியாரின் உலகம், சோதோம் சுட்டெரிக்கப்பட்டது. வாக்கு தத்தம் பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வந்தார். நாமும்கூட ஒரு வாக்கு தத்தம் பண்ணப்பட்ட ஒரு குமாரனுக்காக தேவ குமாரனுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். 49இங்கே நாம் இருக்கிறோம். தேவன் நம்முடைய கண்களை திறப்பாராக. சொல்வதற்கு வேறொன்றையும் நான் அறியேன் . அவர்தாமே நம்முடைய கண்களை திறப்பாராக. பரலோக பிதாவே, நான் பிரயோஜனமற்றவன், நீர் ஒன்றுகூட்டி உண்டாக்கின ஒரு களிமண் உருண்டையாய் நான் இருக்கிறேன். ஓ! தேவனே; இன்றிரவு நான் உம்முடைய கிருபை யையும் சமுகத்தையும் பெற்றுக் கொண்டு, நீர் இங்கே கொண்டு வந்ததான இந்த இரண்டு கட்டி களிமண்ணை எடுத்து உபயோ கிக்கும்படியாக, கர்த்தாவே நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப் பட்டு, ஒருகால் இது மட்டும் அதை பெறாமலிருப்பவர்கள் இந்த வாக்குதத்தங்களை அவர்கள் காணும்படியாய் செய்யும். அது இன்னொரு நாட்களுக்கென்று ஒருகால் அவர்கள் போதிக்கப்பட்டி ருக்கலாம். ஆனால் அது வேகத்தில் இருக்கின்றது. வேதம் அதை உறுதிபடுத்துகிறது கர்த்தாவே. அது உம்முடைய சொந்த வியாக்கியானமாய் இருக்கிறது. அதை காட்டிலும் அதற்கு அதிக மாய் தேவையில்லை, நீர் மட்டும் அதை அதுபோன்றே செய் வீரானால், அப்பொழுது அவர்கள் வார்த்தை சத்தியம் என்று கண்டு கொள்வார்கள். அதை அளியும் பிதாவே. நாங்கள் எங்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். 50இன்றிரவு இங்குள்ள யாவரும் கர்த்தாவே அவர் களுடைய விசுவாசத்தை உபயோகிக்கட்டும். இயேசுகிறிஸ்துவின் மூலமாய், ஆபிரகாமின் கோத்திரத்தின் அங்கத்தினர் யாவரும் இன்றிரவு விசுவாசத்தை உடையவர்களாய், உம்முடைய பிரசன்னத்தை ஏற்றுக் கொள்வார்களாக. நாங்கள் உமக்கு துதியை செலுத்துகிறோம். ஆமென். இப்பொழுது இது ஒரு விநோதமாயிருக்கின்றது. நீங்கள் இப்பொழுது எனக்கு உதவி செய்யவேண்டும். எனக்காக ஜெபியுங்கள். அப்படியே அமைதலாக உட்கார்ந்திருங்கள். இங்கு மங்குமாக போகவேண்டாம். அப்படியேயிருந்து ஜெபியுங்கள். இப்பொழுது பாருங்கள். இது சுவிசேஷ ஊழியத்தி லிருந்து ஒரு மாறுதல் ஒருவிதமாக உங்களை சாவதானமாக்கி கொண்டு, ஆவியானவர் தாமே உங்கள் முழுவதுமாக இன்னொரு மேலான நிலைக்கு கொண்டு போதல். இங்கே ஒரு வாலிபபெண் நின்றுகொண்டிருக்கிறாள். கொஞ்சம் இங்கே இப்படி வாருங்கள். அதுபோதும், நான் இந்த ஒலிபரப்பியை விட்டு விலகி இராதபடிக்கு பாருங்கள். என்ன சம்பவிக்கிறதென்றே எனக்கு தெரியாது. பாருங்கள் பின்பு உங்களுக்கு தெரியும் நான் அறியக்கூடிய ஒரே வழி அது ஒலிபரப்பி யில் இருக்கிறது. அதை அவர்கள் பற்றிக்கொள்ள முயற்சிக்கிறாள். அது என்னவென்று எனக்கு தெரியாது. 51இப்பொழுது, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். உன்னை எனக்கு தெரியாது. என் ஜீவியத்தில் நான் உன்னை கண்டது கிடையாது. ஆனால் நீ என்னைக் காட்டிலும் மிக இளையவள். ஒரு வேளை நாம் அநேக ஆண்டு வித்தியாசத்தில் அநேக மைல்கள் வித்தியாசமான தூரத்தில் பிறந்திருக்கலாம். இதுதான் நாம் முதன்முறையாக சந்திக்கிறோம். அது சரிதானே? அது உண்மை யானால் இங்குள்ளோர் காணும்படியாக உன் கைகளை உயர்த்து. அவள் ஒரு பெண்ணாய் இங்கே நின்று கொண்டிருக்கிறாள். இதை திரும்ப வேத வார்த்தைகளுக்கு கொண்டு செல்லுவோம். யோவான் 4ம் அதிகாரம், நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்கு போய் அதை வாசியுங்கள். இந்த பெண்மணியானவள் அந்த ஸ்திரியை போன்றவள் என்றல்ல. எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரியும். நான் இயேசு கிறிஸ்து அல்ல. ஆனால் அவர் இங்கே இருக்கிறார். அது அவர்தான். அவருடைய ஆவி நம்மை அபிஷேகிக்கிறது. கிணற்றண்டையில் அந்த ஸ்திரியினியிடம் செய்தது போன்று இவளுக்குள்ள தொல்லைகளை வெளிப்படுத்த முடியும். அதே காரியம். அதனிமித்தமாக அந்த நாட்களின் ஆசாரியர்களும் தலைவர்களும் 'இந்த மனிதன் ஒரு குறி சொல்லுகிறவன் அல்லது ஒரு பிசாசு, பெயல் செபூல்“ என்றார்கள். இந்த ஸ்திரியானவள் ' ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வருகிறார் என்றும் இது தான் அவருடைய அடையாளம் என்றும் நாங்கள் அறிவோம். எத்தனை பேருக்கு அது உண்மை என்று தெரியும். சரி அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், இன்றிரவும் அது அவருடைய அடையாளமாய் இருக்க வேண்டு மல்லவா? கடைசி காலத்திற்கு முன்பாக இப்படி இருக்குமென்று அவர் வாக்குப்பண்ணவில்லையா? இப்பொழுது அவர் ஆபிரகாமின் வித்திற்கு தம்முடைய வாக்குதத்தத்தை காத்துக் கொள்ளுகிறாரா என்று பாருங்கள். 52இங்குள்ள யாராவது அது தவறு என்று நினைப்பீர் களானால் நீங்கள் இங்கே வந்து அதே காரியத்தை செய்யுங்கள், அப்படி அது இல்லையென்றால், அப்பொழுது அதை குறித்து ஒன்றும் சொல்லாதிருங்கள். உங்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன். இப்பொழுது தேவனுடைய மகிமைக்கென்றும் கனத்திற்கென்றும் எல்லா ஆவிகளையும் என்னுடைய கட்டுக் குள்ளாக கிறிஸ்துவின் நாமத்தினால் நான் எடுத்துக் கொள்ளு கிறேன். 53வாலிப ஸ்திரியே, கொஞ்ச நேரம், நான் பேசவேண்டும். நம்முடைய கர்த்தர், கிணற்றண்டையில் அந்த ஸ்திரியினிடம் பேசினார் என்று நீங்கள் அறிவீர்கள் . அவர் 'எனக்கு குடிக்கக் கொண்டுவா'' என்றார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இப்பொழுது கவனியுங்கள். பரி. யோவான் 5ல் அவர் “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யகுமாரன்'' அது சரி, பிரகாரமாக அவரே தான் ”காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார்.'' பிதா செய்ய தாம் காண்கிற தெதுவோ, அதை மட்டுமே. பிதா என்ன செய்கிறாரோ, குமாரனுக்கு காண்பிக்கிறார். புரிகின்றதா, தானாய் ஒன்றையும் செய்கிறதில்லை ஆனால் பிதா செய்ய தாம் காண்கிறதெதுவோ அதைதான். அப்படியானால், தேவன் தரிணத்தில் தமக்கு காண் பிக்காமல் இயேசுவானவர் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை, அவருடைய காதில் ஏதோ சொல்லுகிறதல்ல ஆனால் அவருக்கு காட்டுகிறார். “நான் காண்கிறதெதுவோ'' கேட்பது என்றல்ல ”பிதா செய்யக் காண்கிறதெதுவோ“ அதுதான் அவரை மோசே சொன்னது போன்ற மோசேயை போலொத்த ஒரு தீர்க்கதரிசியாய் ஆக்கினது அவர் பிதாவே அறிந்திருந்தார்... அவர் எரிகோவிற்கு போய்க் கொண்டிருந்தார். ஆனால் அவர் சமாரியாவின் வழியாய் போக வேண்டிய அவசியமிருந்தது. அவர் சீகார் என்னும் பட்டணம் மட்டும் வந்தார். இப்பொழுது பாருங்கள், சமாரியர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். 54யூதர்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவர் தம்முடைய அடையாளத்தை காண்பித்தார், பிலிப்பு, நாத்தான் வேல், பேதுரு, அந்த அடையாளமானது காட்டப்பட்டவுடனேயே “நீர் தேவனுடைய குமாரன்'' 'என்றார்கள். ஆனால் ரபியோ: இந்த மனிதன் பெயல்செபூல்'' என்று சொன்னான். ஆனால் இப்பொழுது நினைவிருக்கட்டும், நாம் Anglo - Saxson ஆங்கிலேய சாக்ஸன்களாக இருக்கிறோம், நாம் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நாம் அஞ்ஞானிகள், ரோமர்கள், இப்படி பலராயிருக்கிறோம். நாம் மேசியாவையும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவரை யார் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே அவர்வருகிறார். 55ஆனால் சமாரியர்கள் அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்களுக்காக அவர் சமாரியாவின் வழியாக அவர்களிடத்திற்கு போனார். அவர் கிணற்றின் பக்கமாக உட்கார்ந்தார். ஒரு வாலிப ஸ்திரி ஒரு வேளை உன் வயதிருக்கலாம் வெளியே வந்தாள். அவள் ஒரு தவறான பிரசித்தி பெற்றவளா யிருந்தாள். நீங்கள் அந்த கதையை படித்திருப்பீர்கள் என்று யூகிக் கிறேன் அவர் “ஸ்திரியேதாகத்துக்குத்தா” என்று சொன்னார். அவள் “ஓ! நீர் ஒரு யூதனாயிருக்க சமாரியளாகிய என்னிடத்தில் இப்படிக் கேட்பது வழக்கத்திலில்லாததாயிற்றே'' என்று சொன்னாள். ''ஆனால் நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிவாயானால் நீயே அவரிடத்தில் தாகத்திற்கு கேட்டிருப்பாய்“ என்று அவர் சொன்னார். தொடர்ந்து சம்பாஷனை போயிற்று. முடிவிலே அவளுடைய காரியம் எங்குள்ளது என்று அவர் அறிந்து கொண்டார். உங்களுக்கு நினைவிருக்கின்றதா அது என்னவென்று? அவளுக்கு அநேக புருஷன்மார்கள் இருந்தார்கள். ''நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டுவா'' என்று சொன்னார். அவர் ''எனக்கு புருஷன் இல்லை“ என்றார். 'சரியாய் சொன்னாய். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கு இருந்தார்கள். இப்பொழுது நீ ஜீவித்துக் கொண்டிருக் கிறவனும் உனக்கு புருஷனல்ல'' என்று சொன்னார். ''ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் இப்படிப்பட்ட காரியங்களை எங்களுக்கு சொல்லுவார்'' என்று அவள் சொன்னாள். அவர் 'நானே அவர்'' என்று சொன்னார். அவள் தன்னுடைய குடத்தை அங்கேயே வைத்து விட்டு ஊருக்குள்ளே ஓடிப்போய் “நான் செய்தவற்றை ஒரு மனுஷன் எனக்கு சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியா தானோ'' என்றாள். அநேக நூற்றுக் கணக்கான வருஷங் களாக அவர்களுக்கு தீர்க்கதரிசியே இல்லை. ஆனால் தன்னை மேசியா வென்று உரிமை பாராட்டுகிற ஒரு மனுஷன் இருக்கிறார். ஒரு தீர்க்கதரிசியாய் த ன் னை நிரூபித்தார். மேசியாவின் அடையாளத்தை காட்டினார். 56அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கின்றபடியினால் இதே காரியத்தை செய்வேன் என்று வேத வார்த்தைகளில் வாக்களித்திருக்கிறார். அவர் அதே காரியத்தை செய்வாரேயானால் அது உன்னை அதே காரியத்தை விசுவாசிக்கும் படி செய்யுமா? அது கூடியுள்ள உங்களை விசுவாசிக்கும்படி செய்யுமா? நீ சிறுநீரகக் கோளாறினால் கஷ்டப்படுகின்றாய். அது சரி என்றால் உன் கையை உயர்த்திக் காட்டு. '“ - அது ஏன் எப்பொழுதும் என் முகத்தில் மோதிக் கொண்டேயிருக்கிறது? ''அவர் அதை யூகிக்கிறார்' என்று யாரோ சொல்லுகிறார்கள். நான் அதை ஒருபோதும் யூகிக்கவேயில்லை. அவள் ஒரு அருமையான ஸ்திரி. நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு தெரியும். நான் அதை யூகிக்க வில்லையென்று இன்னும் சிலவற்றை நான் சொல்லுகிறேன். உன்னுடைய புருஷன் உன்னோடு கூட இருக்கிறார். அவருங் கூட் சுசுவீனமாய் இருக்கிறார், முதுகெலும்பில். அது சரிதானே இல்லையா? உன்னுடன் ஒரு சிறு பையன் இருக்கிறான். அவனும்கூட வியாதியாயிருக்கிறான். அவனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறாய் அவனுடைய கண்களில் ஏதோ கோளாறு. அது சரியா. உன்னுடன் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு உன்னை போன்று சிறுநீரக கோளாறு. அது சரிதானே? நீ மட்டும் விசுவாசிப்பாயேயானால் நீங்கள் யாவரும் சுகமடையலாம். நீ அதை விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. “நீ உன் பாதையில் போய் சுகமாயிரு. 57நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது என்ன? அவர் என்ன செய்ய பிரயாசிக்கின்றார்? ஆபிரகாமின் வித்தே உனக்கு அவர் மரிக்க வில்லையென்று காண்பிக்கிறார். என்னால் இந்த காரியங்களை செய்ய முடியாது. அவர் மரிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ஜீவிக் கின்றவராய், உன்னுடைய பகைஞனின் வாசல்களை சுதந்தரிக்க உனக்கு உரிமை உண்டு என்று அவர் உங்களுக்கு காட்டுகின்றார். 'அது எல்லாவற்றையும் தீர்க்க வேண்டும். 58இந்த ஸ்திரி இந்த வழியாக வாருங்கள், சிறிது நேரம். நாம் ஏறக்குறைய ஒரே வயதுடையவர்களாயிருப்போம் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்தமட்டில் நாம் ஒருவருக்கொருவர் அந்நியராயிருக்கிறோம். எனக்கு உன்னை தெரியாது நாம் அந்நியர்கள். உன்னைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அது உண்மையென்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. யாரோ உனக்கொரு ஜெப அட்டையை கொடுத்தார்கள், நீ இங்கே இருக்கிறாய்.. சரியா? நான் ஒருகால் - சகோ. ஓரல் ராபட்சுடைய ஸ்தானத்தை அல்லது சில பெரிய விசுவாச மனிதர்களின் ஸ்தானத்தை எடுக்க முயற்சிபேனானால், நான் ''ஸ்திரியே உன்னுடைய குறை என்ன?“ என்று கேட்டிருப்பேன். நீ சொல்லுவாய் ''எனக்கு இன்னின்ன குறை“ என்று, ஒருவேளை சரியாய் சொல்லாதவனாயிருக்கலாம். புரிகின்றதா? எனக்கு தெரியாது. ஆனால் என்ன கோளாறு என்று நீ அவனிடத் தில் சொல்லலாம். அவர் உன் மேல் கையை வைத்து ''வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்கும்படி தேவன் என்னை அனுப்பினார். நீ அதை விசுவாசிக்கிறாயா? 'ஆம்“ தேவனுக்கு மகிமையுண்டாவதாக. போ, அதை விசுவாசி” என்று சொல்லுவான். அது சரி தான். அது சரிதான். தேவன் அதை வாக்கு பண்ணி இருக்கிறார். ஆனால் நீங்கள் பாருங்கள். நாம் அந்த நாளை காட்டிலும் கொஞ்சம் தாண்டி ஜீவிக்கிறோம். ''சோதோமின் நாட்களில் நடந்தது. போல. நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“ என்று இயேசு வாக்களித்திருக்கிறார். 59இப்பொழுது தேவன் நீ எப்படி இருந்தாய் என்று எனக்கு சொல்வாரானால், உனக்கு தெரியும் அது உண்மையா இல்லையா என்று. நீ என்னவாய் இருப்பாய் என்று அவரால் சொல்லமுடியும். அப்படி அது உண்மையாயிருந்தால், இதுவும் கூட உண்மையாயிருக்கும். என்னவாயிருந்தாலும் அவர் உனக்கு சொல்வாரானால், எனக்கு தெரியாது, ஆனால் உனக்குள்ள தொந்தரவு என்னவென்று அவர் சொல்வாரானால். கூடியுள்ளோரே நீங்கள் விசுவாசிப்பீர்களா? நான் உண்மையாகவே இங்கே நிறுத்த வேண்டும். கொஞ்ச நேரத்திற்கு முன்பாக இருந்த அந்த நபர் அதை உறுதிப் படுத்த வேண்டும். இயேசு அதை ஒருமுறை செய்திருக்கிறார். அவர் அதை இன்னொருமுறை செய்யவில்லை. சீகாரிலிருந்த அனைவரும் அதை விசுவாசித்தார்கள். அந்த ஸ்திரி போய் அவர்களிடம் சொன்னபோது, அவளின் சாட்சியை அவர்கள் விசுவாசித்தார்கள். அவள் ஒரு தவறான பிரசித்தி பெற்ற ஸ்திரி. ஒரு கிறிஸ்தவன் உங்களெல்லாருக்கும் முன்பாக இப்பொழுது தான் மேடையைவிட்டு போனான்! ஆமென்! ஆனால் நாம் நினைப்பதைக் காட்டிலும் கடந்ததாக காணப்படுகிறவைகளை கர்த்தர் தாமே ஆபிரகாமின் வித்திற்கு தாம் மகாபெரிய ஜெயவீரர் என்று நிரூபிப்பாராக. அவர் அதை ஆபிரகாமுக்கு ஒருமுறை செய்தார். பின்பு அதை அழித்துப் போட்டு அதை மறுபடியுமாக செய்தார், ஆபிரகாம் தொடர்ந்து தேவனை விசுவாசிக்கும்படியாக, 60நீ உனக்காக இங்கு இருக்கவில்லை. நீ வேறு யாருக் காகவோ இங்கு இருக்கிறாய். அது ஒரு ஸ்திரி. அது உன்னுடைய சகோதரி. அவள் மேல் மரணத்திற்கேதுவான நிழல் விழுந்திருக் கிறது. அவள் சக்கரை வியாதியினால் கஷ்டப்படுகிறாள். அவள் இங்கிருந்து வரவில்லை. அவள் சதுசதுப்பான (Swampy) நாடாகிய லூசியானவிலிருந்து வருகிறாள், சரியா. இன்னொரு காரியம். கூடி யுள்ளோர் இதை அறிந்து, கொள்ளும்படி, உண்மையாகவேக் வியாதியாயுள்ள ஒரு மகள் உனக்கு இருக்கிறாள் இந்த கூட்டங்களில் அவள் பங்கு பெற திட்டமிடப்படுகிறது. அவள் காக்காய் வலியினால் கஷ்டப்படுகிறாள். அது உண்மை . அது உண்மை இல்லையா? இப்பொழுது நீ விசுவாசிக்கிறாயா? நீ ஆபிரகாமின் வித்தாய் இருப்பாயானால் இதை ஏற்றுக் கொண்டு வெளியே போ. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமடைந்து கொள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அது அவருடைய வாக்கு தத்தம் என்பது நினைவிருக்கட்டும். அதை செய்வேன் என்று அவர் சொல்லி இருக்கிறார். அவர் தம்முடைய வாக்கு தத்தத்தை காத்துக் கொள்ளுகிறார். நீ எப்படி இருக்கின்றாய்! நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் எனக்கு உன்னை தெரியாது. ஆனால் தேவன் நீ யாரென்று அறிவார். உனக்குள்ள தொல்லை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால் நீ விசுவாசிப்பாயா. அப்பொழுது நீ அறிந்து கொள்வாய். அது ஏதோ ஆவிக்குரிய வல்லமையிலிருந்து வெளிவருகிறது என்று. அது வரக்கூடிய இரண்டே வழிகள் தான் உன்னால் யூகிக்க முடியும். ஆனால் அது நடந்தேறின பிறகு, அது விவரிக்க முடியாததொன்றாய் இருக்கிறது. ஏனென்றால் அது ஒரு Phenomina ஆச்சரியமான காரியம். அதுமட்டுமல்லாமல் அது ஒரு நம்பமுடியாத உண்மையாயிருக்கிறது. ஆனாலும் உண்மை . இப்பொழுது உனக்கு தெரியும் அது உண்மையா இல்லையா என்று. அவர் உண்மையை சொன்னாரா இல்லையா என்று நீ அறிந்து கொள்வாய். 61நினைவிருக்கட்டும் எனக்கு உன்னை தெரியாது. இது நானாக இல்லாமல் வேறு யாரோவாக இருக்க வேண்டும். நீ அந்த பரிசேயர்களை போன்று செய்து “ அது ஒரு பொல்லாத ஆவி என்று சொல்வீர்களானால் அப்பொழுது அதற்குரிய பலனை பெற்று கொள்வீர்கள். நீங்கள் அது கிறிஸ்து என்று விசுவாசிப்பீர்களானால் அதற்குரிய பலனை பெற்றுக் கொள்வீர்கள். நீ அதை விசுவாசிப் பதற்குள்ள காரணம் என்னவென்றால் அவர் அதை இந்த நாட்களுக்கென்று வாக்குபண்ணியிருக்கிறார். அது அந்த நாள் துவங்கி இந்நாள் மட்டுமிருக்கிறது. அது தான் அதை கடைசி காலமாக ஆக்குகிறது. யாரோ ஒருவர் உனக்கு முன்பாக காட்சியளித்துக் கொண்டே இருக்கிறார். அது ஒரு மனிதன். தலை நரைத்தவன் அது உன்னுடைய புருஷன். அவர் நேராக அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவருடைய சுகத்தை ஏற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு புற்று நோய் வளர்ச்சி யினால் நிழலிடப்பட்டிருக்கிறார். உனக்கு சிறுநீரக, சிறுநீரக பை தொல்லை இருக்கிறது. நீங்கள் திரு. திருமதி லிட்டில். அது சரியா? உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து சுகமடையுங்கள். நீ அவர்கள் பெயரையா சொல்லுகிறாய்? ஏன் நிச்சய மாக. இயேசு பேதுருவை பார்த்து “உன்னுடைய பெயர் சீமோன்; நீ யோனாவின் குமாரன்'' என்று சொல்லவில்லையா? 62இங்கே ஒரு மனிதன் இருக்கிறார். ஐயா நாம் ஒருவருக் கொருவர் அந்நியர்கள். எனக்கு உம்மை தெரியாது. நீர் ஒரு மனிதன். பேதுரு இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு வந்தது போன்று நாம் சேர்ந்து வருகிறோம். என்னை அவருடைய ஊழியன் என்று விசுவாசிக்கிறாயா? நான் சொன்னது உண்மை என்று நீ விசுவாசிக் கிறாயா? உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால் என்னால் உனக்கு செய்யக்கூடியது ஏதாவது இருக்குமானால் நான் அதை செய்வேன். ஆனால் நான் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. அவர் அதை ஏற்கெனவே செய்து விட்டார். நீ அதை விசுவாசிக்கும் படியாய் ஏதோ செய்கிறோம். ஆனால் அது நானாய் இருக்க முடியாது. அது நானாக இருக்கக் கூடுமானால், என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருப்பேன். ஆனால் அவர் எனக்கு ஒரு வரத்தைக் கொடுத் திருக்கிறார். அவருக்கு முன்பாக நான் சாவதானமாக இருக்க அவர் பேச்சை நடத்துகிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? 63சபையோரே நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு மனிதனை கண்டுபிடிக்க விரும்புகிறேன். உன்னுடன் பலவிதமான கோளாறுகள் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரு காரியம், உன்னுடைய வலது கண்ணில் ஒரு விதமான வளர்ச்சி இருக்கிறது. அது தான் உனக்கிருக்கும் முக்கியமான கோளாறு இங்கே இன்னொரு காரியம். ஒரு ஸ்திரி தொடர்ந்து இங்கே காட்சியில் வந்து கொண்டேயிருக்கிறாள். அது உன்னுடைய மனைவி. உன்னுடைய மனைவிக்குள்ள கோளாறு என்னவென்று தேவனால் எனக்கு சொல்லக்கூடும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவளுக்குள்ள கோளாறு அவளுடைய வாயில். அது அவளுடைய பற்கள் அது சரியா? சீமோன் பேதுரு யார் என்று சொல்லக்கூடிய அதே இயேசுவானவரால் நீ யாரென்று சொல்லக்கூடும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அது உன் விசுவாசத்தை அதிகப்படுத்துமா? “அதிகப்படுத்தும். ஆஸ்கர் பார்ன்ஸ். அது சரியா? நீ உன் வழியே வீட்டிற்கு போய் சுகமடைந்தவனாயிரு. 64உனக்கு நான் அந்நியன். நான் உன்னை அறியேன். ஆனால் தேவன் உன்னை அறிவார். உனக்குள்ள கோளாறு என்ன வென்று என்னிடத்தில் அவரால் சொல்லமுடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய முழு இருதயத்தோடு நீ அதை விசுவாசிக்கிறாயா? என்னுடைய கோளாறு தொண்டையை சுற்றி உன்னுடைய மார்பில் இருக்கிறது. அது ஒரு எலும்பு அழிவினால் உம்முடைய எலும்பு அமைப்பில் முடிச்சும் உருண்டைகளுமாய் இருக்கிறது. அது சரியா? நீர் இந்த இடத்தை சேர்ந்தவர் அல்ல. ஆரெஞ்சு பழ தோப்புகள் உள்ள பட்டணம். அது ஒரு பள்ளத் தாக்கிலுள்ளது. அதற்கு சுற்றிலும் ஒரே மலைகளால் சூழப்பட் டுள்ளது. ஆன்ட்ல ர் என்ற ஒரு ஓட்டல் இருக்கிறது. அது சான் பெர்நார்டினோ. அங்கிருந்து தான் நீர் வந்துள்ளீர். நீர் திரும்பி போ விசுவாசிப்பாயானால் இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். புற்றுநோயை தீர்க்கக் கூடியது. ஒன்றே ஒன்று. அது தேவன். அவர் உனக்கு சுகத்தை கொடுப்பார் என்று நீ விசுக் வாசிக் கிறாயா? அதை விசுவாசி! போ. கர்த்தர் எல்லாவற்றையும் முழுமை யாக்குவாராக. 65நீ மிகவுமாக நரம்பு தளர்ச்சியடைந்து நிலை மாறி போவதற்கு உள்ள காரணம். இந்த தளர்ச்சியினால் உன்னுடைய வயிறானது ஒரு வித நிலைக்குள்ளாகுகிறது. உன்னால் ஜீரணிக்க முடியாமல் வாயின் வழியாய் மேலே கொண்டு வருகிறாய். உன்னுடைய வாயெல்லாம் ஒரு அமிலம் இருக்கிறது. சாயங்கால வேளையில் நீ மிகவுமாக களைத்து போகிறாய் - உன்னுடைய வயிற்றில் பெப்டிக் அல்சர் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவால் அதை உனக்கு சொல்ல முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? போய் உன்னுடைய இரவு ஆகாரத்தை சாப்பிடு. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசி. எப்படி இருக்கின்றாய்? அநேக கோளாறுகள் இருக் கின்றது. ஆனால் அவைகளில் நீ பயப்படுகின்ற ஒரு காரியம், ஆர்த்தரிடிஸ் வியாதியினால் நீ முடமாகி போய் விடுவாயோ என்பது தான் அதனின்று உனக்கு சுகத்தை கொடுத்து தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா. கர்த்தராகிய இயேசுவே, நீர் இதை என்னுடைய சகோதரிக்கு அளிக்கும் படியாய் நான் விண்ணப்பிக்கிறேன். இவளுக்கு பார்வையை தாரும். ஸ்திரிகளுக்குள்ள கோளாறை எடுத்துப் போடும், ஆர்த்தரிடீஸை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஆமென். விசுவாசித்தவளாய் இப்பொழுது போ. அவர் அதை செய்வார். அது சரியாகி போகும். சந்தேகப்பட்டாதே உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டே இரு. இருதய வியாதி ஒரு பயங்கரமான காரியம். ஆனால் கிறிஸ்து இருதயத்தை சுகமாக்குகிறார். நீ அதை விசுவாசிக் கிறாயா? போ. அதை விசுவாசி. அது எல்லாமுமாய் சரியாய் போகும். முடமாகி விடுவாய் என்று நீ விசுவாசிக்கிறாயா? இல்லை நானும் கூட அப்படி நினைக்கவில்லை. ஆர்த்தரிடிஸ் என்பது என் எண்ணம். அந்த கருத்த நிழல் ஓ! அது புற்றுநோய். அவர் அதை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசுக்கிறாய்? போ அதை விசுவாசி. அவர் உன்னை சுகமாக்குவார். இருதயத்திலுள்ள அந்த அடைப்பு கொஞ்ச நாட் களாக உங்களை தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இன்றிரவு அது முடிவு பெற போகிறது என்று நீ விசுவாசிக்கிறாயா? போ. அதை விசுவாசி. இயேசு கிறிஸ்து உன்னை சுகப்படுத்துகிறார். அதிக நாட்களாக ஸ்திரிகளுக்குள்ள கோளாறினால் கொஞ்சம் கஷ்டமிருந்தது. காலையில் எழும்புவது உங்களுக்கு கொஞ்ச கஷ்டமாயிருந்தது. உன்னுடை புயங்கள் விரைத்துக் கொள்ளுகிறது. பகல் வருமட்டும் நீ நடப்பதே கஷ்டமான காரியம். அது ஆர்த்தரிடிஸ். போ, அவ்விசுவாசியாகாதே. இனி அது உனக்கு வராது. வெறுமனே அதை உன் முழு இருதயத்தோடு விசுவாசி. 66உக்கு அநேக விதமான சிக்கல்களுண்டு , உன்னை மிகவு மாக கவலைக்குள்ளாக்குகிறது ஒன்றே ஒன்று. நீயும் , கூட ஆர்த்தரிடிஸை குறித்து நினைக்கிறாய். அது உன்னை முடமாக்கிக் கொண்டு வருகின்றது. அவர் உன்னை நடக்க வைத்து சுகமாக ஆக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? போ. உன் முழு இருதயத் தோடு விசுவாசி. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். பயமான இருதயம், ஆர்த்த ரிடிஸ். ஆனால் தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக் கிறாய் போ, இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார், கடந்த சில வருஷங்களாக அந்த வயிறு நிச்சயமாக அதிக தொல்லை கொடுத்திருக்கும். இல்லையா? இனி அப்படி இருக்காது. போ. அதை விசுவாசி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப் பாராக. நீயும்கூட உன்னுடைய வயிறும் சுகமாக்கப்பட்டது. போ, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. சந்தேகிக்காதே. சுவாசிப்பது மிகவும் கடினமாயிருக்கிறதா. அந்த பழய ஆஸ்துமா உன்னை அப்படியே அழுத்துகிறது இல்லையா? அது இப்பொழுது தீர்ந்து போகப் போகிறது என்று விசுவாசிக்கிறாயா? சரி. போய் விசுவாசி. ஆமென், அல்லேலுயா! உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 67கொஞ்சநேரம் அங்கிருக்கின்ற அந்த ஒளியை நீங்கள் பார்க்க முடியவில்லையா? அங்கே நேராக உட்கார்ந்து கொண் டிருக்கின்ற ஒரு சிறிய ஸ்திரி, என்னை நோக்கி பார்த்துக் கொண் டிருக்கின்ற அந்த கருத்த ஸ்திரி. அவளுடைய இடது பக்கத்தில் ஒரு வளர்ச்சி இருக்கின்றது. அவளுக்கு சிறுநீரக கோளாறு இருக்கின்றது. சிக்கல்கள். உன்னிடம் ஆதீன விசுவாசமுண்டு. நீ இங்கே வரவேண்டிய அவசியமில்லை. அது முடிந்து விட்டது. நீ அதை விசுவாசி. ஆமென் தேவனிடத்தில் விசுவாசமாயிரு! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு இருக்கின்ற முது கெலும்பு கோளாறி லிருந்து சுகம் பெறுவீர்கள் என்று சகோதரியே நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, சந்தேகப்படாதே நீ அதை விசுவாசித் தால், நீ அதை பெற்றுக் கொள்ள முடியும். இங்கே உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த மனிதன் குனிய முடியாத கோளாறினால் கஷ்டப்படுகிறார். இரவு நேரங்களில் விழித்தெழுவது போன்று. ஐயா நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால் எல்லாம் தீர்ந்து விடும். 68இங்கே ஒரு கருத்த மனிதன் உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் காக்காய் வலியால் கஷ்டப்படுகிறான். அவன் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை யும் தேடிக்கொண்டிருக்கிறான், ஐயா எழும்பி நின்று உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களுக்கு பரிசுத்தாவியின் அபிஷேகத்தை அருளுவாராக. ஆமென். உங்களிலிருந்து எதிர் நேராக உட்கார்ந்துக் கொண் டிருக்கின்றவர். ஒரு பிள்ளையும் நேராக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. அதுக்கும் கூட வலி வருகின்றது. அங்கே அந்த பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றது ஒருவிதமான மயக்கம், நுரை தள்ளும். தேவன் அந்த பிள்ளையை சுகப் படுத்துவார் என்று விசுவாசிக்கின்றாயா? உன் முழு இதயத்தோடு விசுவாசிக்கின்றாயா? அப்படியானால் தேவன் அந்த பிள்ளைக்கு சுகத்தை அருளுவார். நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? அவர் உண்மையாகவே ஆபிரகாமின் இராஜரீக வித்தல்லவா? அவர் வல்லமையுள்ள ஜெயவீரர் அல்லவா? நீங்கள் உங்கள் பகைஞனின் வாசல்களை சுதந்தரிப்பீர்கள் என்று அவர் வாக்கு பண்ணியிருக் கிறாரா? 69உங்களில் எத்தனை பேர் கட்டப்பட்டிருக்கிறீர்கள்? சத்துருவின் அமுத்தத்தை உணருகிறீர்கள்? சத்துருவின் அமுத்தத்தத்தை ஆபிரகாமின் வித்துக்கள். உணருகிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் இந்த விதமாக உங்கள் கரங்களை உயர்த்தி ''சகோதரன் பிரன்ஹாம் நான் நரம்பு தளர்ச்சியினால் கஷ்டப்படுகிறேன்'' என்று சொல்லுங்கள். ஓ! உங்களில் 80% சதவிகிதம் அதை உடையவர்களாயிருக்கிறீர்கள் அது அவ்வளவு அடர்த்தியாயிருக்கிறது. முழுக் கூட்டமும் ஏதோ பெரிய வெண்மையாய் மாறுகிறது. அது ஏறக்குறைய என்னை குருடாக்குகிறது. அங்கே வெளியே எங்கே நீங்கள் இருக்கிறீர்கள். 70இந்த மேடையின் மீதே 20 அல்லது 30 பேர்கள் இருக்கலாம். அந்த உட்கார்ந்திருக்கும் கூட்டத்திலும், தேவன் மாறாதவராயிருக்கிறார்? அது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர் களா! அப்படியானால், ஏன் ஆபிரகாமின் வித்துக்களெல்லாம், ஏன் நீங்களெல்லாரும் அந்த திறவுகோலை இப்பொழுது ஏன் எடுக்கக்கூடாது? உனக்காக அதை ஜெயித்த அந்த மா ஜெயவீரர் இங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறதாக நிரூபித்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய விசுவாச திறவுகோலை எடுத்து, உங்கள் கரங்களை நீட்டுங்கள், “இயேசுகிறிஸ்துவே என்னுடைய சுகத்திற்காக நான் இப்பொழுதே நம்புகிறேன்'' காலூன்றி எழும்பி நில்லுங்கள். உங்கள் கரங்களை உயர்த்தி இப்பொழுது உங்கள் விசுவாசத்தை திறந்து விடுங்கள். ''நான் விசுவாசிக்கிறேன் . கர்த்தராகிய இயேசுவே நான் இப்பொழுதே விசுவாசிக்கிறேன்,'' என்று சொல்லுங்கள். இப்பொழுது ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கரங்களை வையுங்கள். ஒருவர் கரத்தை இன்னொருவர் கரத்தினூடாக இன்னொரு ஆபிரகாமின் வித்தை தொடுங்கள். இப்பொழுது அந்த நபருக்காக ஜெபியுங்கள். உங்கள் கரங்களை அவர்கள்மேல் வையுங்கள். இயேசு சொன்னார் “விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன. வியாதியஸ்தர்கள் மேல் அவர்களுடைய கைகளை வைத்தால் சுகமடைவார்கள்'' என்று. சாத்தானே யுத்தத்தில் நீ தோற்றுப் போனாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இங்கிருந்து நீ வெளியே வா, தேவனுக்கு மகிமையாக ஜனங்கள் போவார்களாக.